நாளையுடன் முடிவுக்கு வரும் BSNL யின் இரண்டு திட்டம், இனி இந்த நன்மை கிடைக்காது
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL அதன் கஸ்டமர்களுக்கு இந்திய குடியரசு தினத்திற்கு இரண்டு திட்டத்தில் ஆபர் நன்மை கொண்டு வந்தது அதில் ரூ,2399 யில் 47 நாட்கள் எக்ஸ்ட்ரா நன்மை வழங்கியது, இதில் கூடுதல் வேலிடிட்டியுடன் ஆகமொத்தம் 412 நாட்கள் கிடைத்தது ஆனால் இனி அது கிடைக்காது மற்றும் இதன் மறுபக்கம் 1ருபாய் திட்டம் இதும் இன்று முதல் முடிவுக்கு வருகிறது. மேலும் இந்த திட்டங்களில் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyBSNL ரூ,2399 திட்டத்தின் நன்மை.
பிஎஸ்என்எல் தனது X ஹேண்டில் மூலம் இந்தச் சலுகை முடிவடைந்ததை அறிவித்துள்ளது. பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் வழங்கும் இந்தச் சலுகை, அந்நிறுவனத்தின் ரூ. 2399 ஆண்டுத் திட்டத்தில் கிடைக்கிறது. இந்தத் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு 47 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி காலத்தை, அதாவது மொத்தம் 412 நாட்களை வழங்குகிறது. மேலும், பயனர்கள் 94ஜிபி கூடுதல் டேட்டா, 4700 இலவச SMS போன்ற பல நன்மை வழங்கியது ஆனால் இப்பொழுது இந்த திட்டத்தில் கிடைத்த எக்ஸ்ட்ரா நன்மை நாளை செப்டம்பர் 12உடன் முடிவுக்கு வருகிறது இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்யாமல் இருந்தால் நீங்கள் உடனே .
Bas, ab rakhte hain…
— BSNL India (@BSNLCorporate) September 6, 2026
5 minute aur?”
For all those conversations that never feel long enough, get 47 extra days of connectivity with the ₹2399 plan.
Now imagine doing it just once.#BReX 👉 https://t.co/SpaVXw85OI#BSNLIndia #StayConnected #InternetForEveryone #DigitalLife… pic.twitter.com/bo1jlPlsPE
BSNL ரூ,1 திட்டத்தின் நன்மை.
பிஎஸ்என்எல் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் ஹேண்டில் மூலம் ஒரு புதிய ரூ. 1 திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த ‘ஃப்ரீடம் ஆஃபர்’ திட்டத்தின் கீழ், புதிய பிஎஸ்என்எல் சிம் வாங்குபவர்களுக்கு நிறுவனம் 24 நாட்கள் வேலிடிட்டி சலுகையை வழங்குகிறது. இதன் பலன்களில் தினசரி 1ஜிபி டேட்டா மற்றும் 100 இலவச SMS அடங்கும். இந்தச் சலுகை செப்டம்பர் 12, 2026 நாளை முதல் இந்த திட்டம் முடிவுக்கு வருகிறது .
இதையும் படிங்க கஸ்டமர் மனதை தொட்ட Jio வின் அந்த ஒரு திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங் போன்ற பல சலுகை
The First “Hello” Starts Somewhere.
— BSNL India (@BSNLCorporate) September 10, 2026
Why not start yours with ₹1?#BSNLIndia #BSNLSelfCareApp #InternetForEveryone #DigitalLife #IndiaOnline #BSNLServices #SmartIndia #EverydayConnectivity #freedom1 @CMDBSNL @robertravi21 pic.twitter.com/Cs47WTG04T
கடந்த ஆண்டு, அந்நிறுவனம் கஸ்டமர்களுக்கு தினசரி 2GB அதிவேக டேட்டாவை வழங்கும் ரூ,1 திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அந்தத் திட்டத்தின் வேலிடிட்டி காலம் 28 நாட்கள் ஆகும். மேலும், கஸ்டமர்கள் இந்தியா முழுவதும் அன்லிமிடெட் கால்கள் , இலவச தேசிய ரோமிங் மற்றும் தினசரி 100 இலவச SMS மெசேஜ் போன்ற பலன்களையும் பெற்றனர்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
