Vivo V50 இந்தியாவில் அறிமுகம் இதன் டாப் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பாருங்க
Vivo அதன் புதிய போனன Vivo V50 இந்தியாவில் ஒரு வழியாக அறிமுகம் செய்துள்ளது, இந்த போன் Vivo V40 யின் மிக சிறந்த வெற்றியை அடுத்த கட்டத்தில் கொண்டு செல்லும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டது, இந்த புதிய போன் ஸ்லிம்மான டிசைன்,Zeiss பவர் கொண்ட AI பவர் கேமரா வழங்கப்படுகிறது மேலும் இதுல FunTouch OS 15 வழங்கப்படுகிறது மேலும் பல டாப் அம்சங்களுடன் இதன் விலை பற்றி தகவல்களையும் பார்க்கலாம் வாங்க.
Vivo V50 டாப் அம்சம்.
டிஸ்ப்ளே :-Vivo V50 யின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில் 2392 × 1080 பிக்சல் ரேசளுசனுடன் இதில் 6.77 இன்ச் கொண்ட முழு HD + டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இதனுடன் இதில் அல்ட்ரா ஸ்லிம் குவாட் கர்வ்ட் ஸ்க்ரீன் கொண்டுள்ளது, மேலும் இந்த போனில் 120HZ ரெப்ராஸ் ரேட்டுடன் 4500nits ப்ரைட்னாஸ் வழங்குகிறது.
ப்ரோசெசர்
Vivo V50 5ஜி போன் ஆண்ட்ராய்டு 15 யில் வழங்கப்படுகிறது, இது ஃபன்டச் OS 15 உடன் இணைந்து செயல்படுகிறது. மேலும் இதன் பர்போமான்ஸ் ஸ்மூத்தாக இருக்க , இந்த 5G மொபைலில் 4 நானோமீட்டர் அடிப்படையாகக் கொண்ட குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 ஆக்டா-கோர் ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது, இது 2.63GHz வரை கிளாக் வேகத்தில் இயங்கும் பவர் கொண்டுள்ளது.
மேலும் இந்த போனின் ரேம் ஸ்டோரேஜ் பற்றி பேசினால், 12GB LPDDR4X RAM மற்றும் 512GB UFS 2.2 ஸ்டோரேஜ் வரை பெறலாம்.
கேமரா
இந்த போனின் கேமரா பற்றி பேசினால் இதில் விவோ வி50 ஸ்மார்ட்போனில் கார்ல் Zeiss லென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த 5G மொபைல் போனில் மொத்தம் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன, மேலும் மூன்றும் 50 மெகாபிக்சல்கள் கொண்டவை. அதன் முன் பலகத்தில் F/2.0 அப்ரட்ஜர் கொண்ட 50-மெகாபிக்சல் செல்ஃபி சென்சார் உள்ளது, இது ஆட்டோ ஃபோகஸ் தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் 92° வைட் என்கில் சப்போர்ட் செய்கிறது .
இந்த மொபைல் இரட்டை பின்புற கேமராவை சப்போர்ட் செய்கிறது , இதன் பின்புற பேனலில் F/1.88 அப்ரட்ஜர் கொண்ட 50-மெகாபிக்சல் OIS ப்ரைம் கேமரா சென்சார் வழங்கப்படுகிறது, அதனுடன் F/2.0 அப்ரட்ஜர் மற்றும் 50-மெகாபிக்சல் வைட் என்கில் லென்ஸ் கிடைக்கிறது, இதனுடன் இந்த போனில் 50 MP செல்பி கேமரா இருக்கிறது.
பேட்டரி
இதனுடன் இந்த போனில் பேட்டரிக்கு 6,000Mah பேட்டரி இதனுடன் இதில் 90W பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.
கனெக்டிவிட்டி :-
இந்த போனில் கனேடிவிட்டி பற்றி பேசுகையில் Bluetooth 5.4, USB 2.0, GPS மற்றும் OTG ஆகிய சப்போர்ட் அடங்கும்.
Vivo V50 5G விலை தகவல்
விவோ வி50 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வகையின் விலை ரூ.34,999 யில் தொடங்குகிறது, அதே நேரத்தில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வகையின் விலை ரூ.36,999 ஆகும். 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் வசதியின் விலை ரூ.40,999 ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்ட்களை பயன்படுத்தி கஸ்டமர்கள் 10 சதவீதம் வரை பேங்க் சலுகைகளைப் பெறலாம்.
கஸ்டமர்கள் ரோஸ் ரெட், டைட்டானியம் கிரே மற்றும் ஸ்டாரி நைட் கலர் ஷேடில்இருந்து தேர்வு செய்யலாம். இந்த போன் பிப்ரவரி 25 முதல் விற்பனைக்கு வரும், இன்று முதல் முன்பதிவு தொடங்குகிறது.
இதையும் படிங்க:Samsung யின் இந்த பிலிப் போனில் ரூ,21,000 டிஸ்கவுண்ட்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile