இனி உங்களின் பெரிய ஸ்க்ரீன் டிவியில் Instagram ரீல்ஸ் பார்த்து மகிழலாம்,

HIGHLIGHTS

Instagram அதன் ரீல்ஸ், மட்டுமின்றி ஸ்டோரி போன்ற பல அம்சங்கள் இருக்கிறது

இப்பொழுது Google TV யில் இப்பொழுது Instagram TV App சப்போர்ட் செய்யும்

நீங்கள் உங்கள் டிவியில் Instgram ஆப்பை டவுன்லோட் செய்து உங்களின் பிடித்தமான ரீல்ஸ், கன்டென்ட் பார்க்கலாம்

இனி உங்களின் பெரிய ஸ்க்ரீன் டிவியில் Instagram ரீல்ஸ் பார்த்து மகிழலாம்,

சோசியல் மீடியாவில் மிகவும் பாப்புலர் நிறுவனமான Instagram அதன் ரீல்ஸ், மட்டுமின்றி ஸ்டோரி போன்ற பல அம்சங்கள் இருக்கிறது மேலும் ஏற்கனவே YOUTUBE ஆப் போல இனி இன்ஸ்டாகிராம் ஆப்பையும் டிவியில் பார்க்கலாம் அதாவது இப்பொழுது Google TV யில் இப்பொழுது Instagram TV App சப்போர்ட் செய்யும். அதாவது 2025 ஆம் ஆண்டின் அமேசான் ஃபயர் டிவியில் அறிமுகமான பிறகு, நிறுவனம் அதை கூகிள் டிவி டிவைச்களுக்க்காகன சேவையை விரிவுபடுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து நீங்கள் உங்கள் டிவியில் Instgram ஆப்பை டவுன்லோட் செய்து உங்களின் பிடித்தமான ரீல்ஸ், கன்டென்ட் க்ரீயேட்டரில் ப்ரோபைல் போன்றவற்றை பெரிய ஸ்க்ரீனில் பார்க்க முடியும் இது கிட்டத்தட்ட Youtube போல வேலை செய்யும் இதன் முழு தகவலை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதில் பயனர்களுக்கு புதியதாக என்ன கிடைக்கும் ?

கூகிள் டிவியில் உள்ள இன்ஸ்டாகிராம் ஆப்பை டிவி ரிமோட்டைப் பயன்படுத்தி எளிதாக இயக்க முடியும். நகைச்சுவை, இசை, விளையாட்டு மற்றும் வாழ்க்கை முறை போன்ற பிரிவுகளாக உள்ளடக்கம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. ஒரு ரீலைக் கிளிக் செய்தால் உடனடியாக வீடியோ தொடங்கும், அது முடிந்ததும், அடுத்த வீடியோ தானாகவே இயங்கும். இந்த அனுபவம் மொபைல் ஸ்க்ரோலிங் செய்வதை விட டிவி சேனலைப் பார்ப்பது போன்றது.

இதையும் படிங்க:இன்று முதல் WhatsApp யில் ரெஜிஸ்ட்டர் செய்யப்பட்ட சிம் இல்லை என்றால் வேலை செய்யாது

பெரிய ஸ்க்ரீனில் இருக்கும் சிறப்பு என்ன?

  • உங்களுக்குப் பிடித்த க்ரீயேட்டர்கள் ரீல்களை பெரிய ஸ்க்ரீனை கொண்டு வந்துள்ளது , இதன் மூலம் நீங்கள் அவற்றை நண்பர்களுடன் ரசிக்கலாம்.
  • சோசியல் மீடியா ரீல்களை ஒன்றாகப் பார்ப்பது மிகவும் வேடிக்கையானது என்று கேள்விப்பட்டிருக்கிறோம், மேலும் இந்த சோதனை எந்த அம்சங்கள் அந்த அனுபவத்தை டிவியில் சிறப்பாகச் செயல்பட வைக்கிறது என்பதை அறிய வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • புதிய இசை, விளையாட்டு சிறப்பம்சங்கள் பிரபலமான தருணங்கள் மற்றும் பலவற்றை கன்டென்ட் உங்கள் ஆர்வங்களுடன் பொருந்தக்கூடிய சேனல்களாக ரீல்கள் மாற்றப்படுகிறது .
  • இந்த புதிய அம்சத்தின் மூலம் உங்களின் போனை ரிமோட்டை போல பயன்படுத்தலாம் எந்த feed உங்கள் நண்ம்பர்களுடன் எந்த ஒரு சேனலையும் பார்க்கலாம்.

எளிதாக டவுன்லோட் செய்யலாம்

இன்ஸ்டாகிராம் டிவி ஆப்பை கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து டவுன்லோட் செய்யலாம். பயனர்கள் லாகின் செய்ய QR கோடை ஸ்கேன் செய்யலாம் அல்லது தங்கள் விவரங்களை கைமுறையாக உள்ளிடலாம். ஒரே டிவியில் ஐந்து அக்கவுண்ட்கள் வரை சேர்க்கலாம், இதனால் வெவ்வேறு குடும்ப உறுப்பினர்கள் தங்கள் சொந்த அக்கவுன்டிலிருந்து பயன்பாட்டைப் பயன்படுத்த முடியும்.

இப்பொழுது இந்த அம்சம் அமேரிக்கா மட்டுமே

இந்த அம்சம் தற்போது அமெரிக்காவில் கிடைக்கிறது, ஆனால் நிறுவனம் விரைவில் இதை மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை இன்ஸ்டாகிராம் இனி மொபைல் செயலியுடன் மட்டும் நின்றுவிடாமல், வீடுகளில் உள்ள டிவி திரைகளிலும் இடம்பெற திட்டமிட்டுள்ளது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile