Vivo யின் புதிய போனின் வருகையால் Vivo V40 5G போனுக்கு அதிரடி டிஸ்கவுன்ட்
Vivo V50 5G போன் பிப்ரவரி 17 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மொபைல் இந்திய சந்தைக்கு வருவதற்கு முன்பு, நிறுவனம் அதன் ‘V’ சீரிஸில் Vivo V40 5G போனில் டிஸ்கவுண்ட் வழங்குகிறது, இதில் 8GB RAM வேரியன்ட் இந்த போனை ரூ.2 ஆயிரம் வரை தள்ளுபடியுடன் வாங்கலாம். மேலும் இந்த போனில் கிடைக்கும் பேங்க் ஆபர் மற்றும் அம்சங்களின் தகவலை பார்க்கலாம் வாங்க.
SurveyVivo V40 5G போனின் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட்.
Vivo V40 5G யின் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ப்ளிப்கார்டில் 34,999ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதன் உண்மையான விலை ரூ,39,999 ஆகும். இப்போது இதில் 12% தள்ளுபடி வழங்கப்படுகிறது, மேலும் பேங்க் ஆபரின் மூலம் இதில் EMI யில் வாங்கினால் 2000ரூபாய் வரை அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர சாதரணமாக அனைத்து பேங்க் கார்ட்களிலும் 1000ரூபாய் அதிரை தள்ளுபடி வழங்கப்படுகிறது, மேலும் இதில் கூப்பன் டிஸ்கவுண்டாக 5000ரூபாய் வரை அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் பல குறைந்த ஆபருடன் வாங்கலாம்.

vivo V40 5G அம்சம்
vivo V40 5G யின் இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த போனில் போனில் 6.78-இன்ச் 1.5K பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே 2800 × 1260 பிக்சல்கள் ரேசளுசன் . AMOLED பேனலில் உருவாக்கப்பட்ட 3D கர்வ்ட் ஸ்க்ரீன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் 4500nits ப்ரைட்னஸ் சப்போர்ட் செய்கிறது .
பின்புற மற்றும் முன் கேமராக்கள் இரண்டிலும் இருக்கும் விவோ V40 இல் ZEISS லென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களை எடுக்க, இந்த மொபைல் F/2.0 அப்ரட்ஜர் கொண்ட 50-மெகாபிக்சல் முன் கேமராவை சப்போர்ட் செய்கிறது. இரட்டை பின்புற கேமரா அமைப்பில் F/1.88 துளை கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைம் கேமரா சென்சார் மற்றும் F/2.0 அப்ரட்ஜர் கொண்ட 50-மெகாபிக்சல் அல்ட்ரா ஆங்கிள் லென்ஸ் ஆகியவை அடங்கும்.
Vivo V40 ஆனது Android 14 அடிப்படையிலான Funtouch OS 14 இல் இயங்குகிறது. செயலாக்கத்திற்காக, இந்த தொலைபேசியில் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 ஆக்டா-கோர் ப்ரோசெசர் உள்ளது, இது 2.63GHz வரை கடிகார வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது. எங்கள் சோதனையில், இந்த தொலைபேசி 810653 என்ற ANUUT மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது. கிராபிக்ஸைப் பொறுத்தவரை, இது அட்ரினோ 720 GPU ஐக் கொண்டுள்ளது.
விவோ வி40 5ஜி போனில் 12ஜிபி நீட்டிக்கப்பட்ட ரேம் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது, இது போனின் 8ஜிபி ரேமுடன் இணைந்து 20ஜிபி ரேம் (8ஜிபி+12ஜிபி) வழங்குகிறது. Vivo V40 5G போனில் பவர் பேக்கப்பிற்காக 5,500 mAh பேட்டரி உள்ளது. இந்த பெரிய பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்ய, இந்த மொபைல் 80W வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்கிறது .
இதையும் படிங்க: Samsung யின் இந்த புதிய போனில் ரூ.8,000 வரை அதிரடி டிஸ்கவுண்ட்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile