Samsung யின் இந்த புதிய போனில் ரூ.8,000 வரை அதிரடி டிஸ்கவுண்ட்

Samsung யின் இந்த புதிய போனில் ரூ.8,000 வரை அதிரடி டிஸ்கவுண்ட்

Samsung Galaxy S25 Ultra 5G வாங்க நினைத்தால்,இது தான் சரியான நேரமாக இருக்கும் Amazon யில் அதிரடி ஆபர் வழங்கப்படுகிறது, இ-காமர்ஸ் தளம் சாம்சங்கின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் சிறந்த பேங்க் சலுகைகளை வழங்குகிறது. அதே சமயம் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் கொடுத்தால் கூடுதல் சேமிப்பைப் பெறலாம். Samsung Galaxy S25 Ultra 5Gயில் கிடைக்கும் ஆபர் மற்றும் சலுகையை பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Galaxy S25 Ultra 5G விலை மற்றும் ஆபர்

Samsung Galaxy S25 Ultra 5G 12GB RAM/512GB ஸ்டோரேஜ் வகை அமேசானில் ரூ.1,29,999 க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது . பேங்க் ஆபர் பற்றிப் பேசுகையில், HDFC பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ.8,000 ஸ்டேண்டர்ட் தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு இதன் விலை ரூ.1,21,999 ஆக இருக்கும். இது தவிர, எக்ஸ்சேஞ்ச் சலுகை மூலம் ரூ.62,200 சேமிக்க முடியும். சலுகையின் அதிகபட்ச நன்மை, எக்ஸ்சேஞ் செய்யப்படும் போனில் தற்போதைய நிலை மற்றும் கண்டிசனை பொறுத்தது என்பதை நினைவில் கொள்க.

Samsung Galaxy S25 Ultra 5G சிறப்பம்சம்

Samsung Galaxy S25 Ultra 5G ஆனது 6.9-இன்ச் டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளேவை 1400×3120 பிக்சல்கள் ரெசளுசன் , 120hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 2600 nits வரை ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ப்ரோசெசர் உள்ளது. Galaxy S25 Ultra ஆனது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட One UI 7 யில் இயங்குகிறது. Galaxy S25 Ultra ஆனது 12GB LPDDR5x ரேம் மற்றும் 1TB வரை UFS 3.2 ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதை microSD கார்ட் வழியாக 1TB வரை விரிவாக்கலாம்.

Galaxy S25 Ultra-வின் பின்புறம் 2x இன்-சென்சார் ஜூம் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) சப்போர்டுடன் 200-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா, 5x ஆப்டிகல் ஜூம் மற்றும் OIS உடன் 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் OIS உடன் 10-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 12-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. Galaxy S25 Ultra ஆனது Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, UWB, GPS மற்றும் USB Type-C போர்ட் ஆகியவற்றை உள்ளடக்கியது.

இதையும் படிங்க: Moto யின் இந்த போனை குறைந்த விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo