Redmi Note 17 Pro சீரிஸ் அறிமுக தகவல் வெளியானது தேதி என்ன பாருங்க

Xiaomi இந்தியாவில் விரைவில் அதன் புதிய Redmi Note 17 Pro 5G சீரிஸ் அறிமுகம் செய்யும், இந்த சீரிஸ் கீழ் இப்பொழுது அறிமுக தேதியை உறுதி செய்துள்ளது. இந்த சீரிஸ் கீழ் Redmi Note 17 Pro மற்றும் 17 Pro Max 5G ஆகிய போன்கள் அடங்கும். மேலும் இந்த போனின் அறிமுகம் செய்யும் முன்னே அதன் ஒரு சில அம்சங்கள் பற்றிய லீக் வெளியாகியுள்ளது மேலும் இந்த போனின் அறிமுக தேதி மற்றும் பல அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.

Redmi Note 17 Pro Max மற்றும் Redmi Note 17 Pro அறிமுக தேதி.

Redmi Note 17 Pro போனின் அறிமுக தேதி அமேசான் மைக்ரோ சைட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 15, 2026 அறிமுகமாகும்.

Redmi Note 17 Pro யில் எதிர்ப்பார்க்கபடும் அம்சம்.

Redmi Note 17 Pro போனில் ஒரு 6.83-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 120 Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது மற்றும் இந்த போனில் 3,500 நிட்ஸ் ப்ரைட்னஸ் சப்போர்ட் வழங்குகிறது இதனுடன் இந்த போனில் கொரில்லா க்ளாஸ் விக்ட்டஸ் 2 ப்ரொடெக்ஷன் வழங்குகிறது.

இதனுடன் இந்த போனில் மிக சிறந்த பர்போமன்சுக்கு Snapdragon 6s Gen 4 சிப்செட் வழங்குகிறது, மேலும் இந்த போனில் 8GB யின் LPDDR4X RAM மற்றும் 256GB UFS 3.1 இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்குகிறது.

மேலும் கேமரா அம்சத்திற்க்கு இந்த போனில் 50MP ப்ரைமரி கேமரா உடன் இதில் 8MP அல்ட்ரா வைட் கேமரா கேமரா மற்றும் செல்பிக்கு 16MP முன் கேமரா இருக்கும் இதனுடன் இந்த போனில் 9000 mAh பேட்டரியுடன் இதில் 67W வயர்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது.

இதையும் படிங்க Apple Launch Event September 2026: எங்கு எப்பொழுது எப்படி பார்ப்பது ? இதில் என்ன என்ன அறிமுகமாகும்

Redmi Note 17 Pro Max சிறப்பம்சம்.

ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ், ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 சிப்செட்டுடன் வரும் என்றும், மேலும் இது 12ஜிபி வரையிலான LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான UFS 4.1 இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம் என்றும் லீக்கள் பரவி வருகின்றன. லேக்க் தகவல்களின்படி, இந்த போனில் ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3-யில் இயங்கும்.

இந்தக் போனில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.83-இன்ச் 1.5K OLED டிஸ்ப்ளே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போனை வெளிப்புறங்களில் பயன்படுத்தும்போது, ​​இது 3500 நிட்ஸ் வரையிலான உச்சபட்ச பிரகாசத்தை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சாதனத்தை நாள் முழுவதும் செயல்பட வைப்பதற்காக, இதில் 10,000 mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கலாம்.

கேமராவைப் பொறுத்தவரை, இந்த சாதனம் 50MP முதன்மை கேமரா மற்றும் 8MP அல்ட்ராவைடு சென்சார் உடன் வரும் என்று வதந்திகள் பரவி வருகின்றன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக , இந்த ஸ்மார்ட்போனில் 16MP முன்பக்க கேமராவும் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :