AI அம்சத்துடன் Realme P3 Pro மற்றும் P3x இந்தியாவில் அறிமுகம் விலை,மற்ற அம்சம் தெருஞ்சிகொங்க

AI அம்சத்துடன் Realme P3 Pro மற்றும் P3x இந்தியாவில் அறிமுகம் விலை,மற்ற அம்சம் தெருஞ்சிகொங்க
HIGHLIGHTS

Realme இன்று அதன் அதன் P3 series அறிமுகம் செய்தது,

Realme அதன் Realme P3 Pro மற்றும் Realme P3x இந்தியாவில் அறிமுகம் செய்தது

இதில் AI அம்சங்களுடன் இதன் கேமரா மற்றும் பர்போமான்ஸ் அப்டேட் செய்ய உதவும்

Realme இன்று அதன் அதன் P3 series அறிமுகம் செய்தது, சீனா தயாரிப்பு நிறுவனமான Realme அதன் Realme P3 Pro மற்றும் Realme P3x இந்தியாவில் அறிமுகம் செய்தது, இதில் AI அம்சங்களுடன் இதன் கேமரா மற்றும் பர்போமான்ஸ் அப்டேட் செய்ய உதவும். மேலும் Realme P3 Pro அதன் லுமிநோஸ் கலர் செஞ்சிங் பைபர் பின்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது இதை தவிர இந்த போன் கர்வ்ட் டிஸ்ப்ளே மற்றும் GT Mode கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இதன் பல சுவாரசிய அம்சம் மற்றும் விலை தகவலை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Realme P3 Pro விலை

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி பி3 ப்ரோவின் விலை ரூ.21,999 இல் தொடங்குகிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.22,999 ஆகவும், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப்-எண்ட் வேரியண்டின் விலை ரூ.24,999 ஆகவும் உள்ளது. இந்த விலைகள் ரூ.2,000 பேங்க் சலுகையையும் உள்ளடக்கியது. இது பிப்ரவரி 25 முதல் விற்பனைக்கு வரும்.

Realme P3x விலை

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Realme P3x ஸ்மார்ட்போன் ரூ.12,999 யில் ஆரம்பமாகிறது . 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப்-எண்ட் மாடலின் விலை ரூ.13,999 ஆகும். இந்த விலைகளில் ரூ.1,000 பேங்க் சலுகையும் அடங்கும் என்பதை நினைவில் கொள்ளவும். இது பிப்ரவரி 28 முதல் வாங்குவதற்கு கிடைக்கும்.

Realme P3 Pro சிறப்பம்சம்.

Realme P3 Pro ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் குவாட்-கர்வ்ட் AMOLED பேனலுடன் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 1,500 nits ஹை ப்ரைட்னாஸ் உடன் வருகிறது.

கேமராவைப் பொறுத்தவரை, இந்த சாதனம் 50MP ப்ரைமரி கேமரா மற்றும் 2MP செகண்டரி கேமராவைப் வழங்குகிறது . செல்ஃபிக்களுக்கு, இது 16MP முன் பேஸிங் கேமராவுடன் வருகிறது. இந்த போன் IP69 சர்டிபிகேசன் வருகிறது

இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் இந்த ஸ்மார்ட்போன் Snapdragon 7s Gen 3 5G சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 8GB வரை RAM மற்றும் 256GB UFS 3.1 LPDDR4X ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த போன் 6,000 mAh பேட்டரி மற்றும் 80W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது. இது Android 15-அடிப்படையிலான Realme UI 6 யில் இயங்குகிறது, இது AI ரெக்கார்டிங், AI ரைட்டர், AI ரிப்ளை, சர்க்கிள் டு சர்ச் மற்றும் பல போன்ற NextAI அம்சங்களுடன் உள்ளது.

Realme P3x சிறப்பம்சம்

Realme P3x இந்த போனில் 6.7-இன்ச் LCD பேணல் உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது, மேலும் இந்த போனில் பாண்டா கிளாஸ் சப்போர்டுடன் வருகிறது, இதை தவிர இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், இதில் MediaTek Dimensity 6400 chipset மற்றும் ARM G57 GPU ப்ரோசெசர் வழங்கப்படுகிறது.

மேலும் இந்த போனின் கேமரா பற்றி பேசினால், 50MP ப்ரைமரி உடன் 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் இதன் முன்பக்கத்தில் 8MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

இப்பொழுது இந்த போனின் பேட்டரி பற்றி பேசினால், 6,000 mAh பேட்டரி உடன் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது, இதனுடன் இது Realme UI 6.0 மற்றும் AI அம்சம் சப்போர்ட் செய்கிறது மற்றும் இதில் IP69 சர்டிபிக்சன் வழங்குகிறது

இதையும் படிங்க Vivo V50 இந்தியாவில் அறிமுகம் இதன் டாப் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பாருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo