அதிகபட்சமாக 9000mAh பேட்டரியுடன் Poco X8 Pro மற்றும் Poco X8 Pro Max அறிமுகம் விலை என்ன பாருங்க
Poco இன்று அதன் Poco X8 Pro மற்றும் Poco X8 Pro Max போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது
MediaTek Dimensity 8500-Ultra ப்ரோசெசர் மற்றும் 9500s சிப்செட் ப்ரோசெசர் வழங்கப்படுகிறது
இந்த இரு போனின் அம்சம் விலை பற்றி பார்க்கலாம் வாங்க.
Poco இன்று அதன் Poco X8 Pro மற்றும் Poco X8 Pro Max போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது மேலும் இந்த போனில் MediaTek Dimensity 8500-Ultra ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மற்றும் இந்த போனில் அதிகபட்சமாக 9000mAhபேட்டரி வழங்குகிறது மேலும் இந்த இரு போனின் அம்சம் விலை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyPoco X8 Pro சிறப்பம்சம்.
POCO X8 Pro போனில் 6.59-இன்ச் டிஸ்ப்ளே வழங்குகிறது இதனுடன் இதில் (2756 × 1268) பிக்சல் ரெசளுசன்உடன் HDR10+ சப்போர்ட் வழங்குகிறது மேலும் இந்த போனில் 120Hz ரெப்ரஸ் ரெட்டுடன் 3500 நிட்ஸ் வரையிலான ப்ரைட்னாஸ் வழங்குகிறது, இதை தவிர இந்த போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்குகிறது,
இதை தவிர இப்பொழுது இந்த போனின் பர்போமான்ஸுக்கு இந்த போனில் MediaTek Dimensity 8500-Ultra (4nm) ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இதில் LPDDR5X ரேம் மற்றும் UFS 4.1 ஸ்டோரேஜ் உடன் உடன் இணைக்கப்படுகிறது. இதை தவிர இந்த போனில் Android 16 அடிபடையின் கீழ் HyperOS 3.0 உடன் வருகிறது மேலும் இது 4 ஆண்டு OS அப்டேட் மற்றும் 6 ஆண்டு செக்யூரிட்டி அப்டேட்டும் வழங்குகிறது.
கேமரா அம்சங்களை பொறுத்தவரை இந்த போனில் மெயின் 50MP Sony IMX882 அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 8MP செகண்டரி கேமரா லென்ஸ் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போனில் செல்பிக்கு முன் பக்கத்தில் 20MP கேமரா வழங்கப்படுகிறது இதன் பின் கேமராவில் 60fps யில் 4K மற்றும் 60fps யில் 1080p முன் கேமராவில் வீடியோவும் ரெக்கார்டிங் செய்ய முடியும். இப்பொழுது பேட்டரி பேக்கப்புக்கு இந்த போனில் 6500mAh பேட்டரியுடன் 100W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.
இதையும் படிங்க 7,200mAh பேட்டரியுடன் Vivo T5x 5G போன் அறிமுகம் விலை அம்சங்கள் அனைத்தையும் தெருஞ்சிகொங்க
POCO X8 Pro Max சிறப்பம்சம்.
POCO X8 Pro Max போனின் அம்சங்கள் பற்றி பேசினால், 6.83-இன்ச் டிஸ்ப்ளே வழங்குகிறது இதில் ( 2772 × 1280) பிக்சல் ரெசளுசன் உடன் HDR10+ மற்றும் 120Hz ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது, இதனுடன் இதில் 3500 நிட்ஸ் ப்ரைட்னஸ் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்குகிறது.
மேலும் இந்த போனில் MediaTek Dimensity 9500s (3nm) சிப்செட் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் LPDDR5X Ultra ரேம் மற்றும் UFS 4.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது இதை தவிர இந்த போனில் சாப்ட்வேருக்கு Android 16 அடிபடையின் கீழ் HyperOS 3.0 சப்போர்ட் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனில் 4 OS அப்டேட் மற்றும் 6 ஆண்டு செக்யூரிட்டிஅப்டேட் வளம்ன்கப்படுகிறது.
மேலும் X8 Pro Max போனின் கேமரா பற்றி பேசினால் Light Fusion 600 சென்சார் உடன் மெயின் 50MP அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 8MP செகண்டரி கேமரா வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போனில் செல்பிக்கு முன் பக்கத்தில் 20MPமுன் கேமரா வழங்கப்படுகிறது.
இந்த போனில் இருக்கும் மிக பெரிய ஹைலைட் 9000mAh பேட்டரி உடன் இதில் 100W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் 27W ரிவர்ஸ் ரீசார்ஜ் சப்போர்ட் வழங்கப்படுகிறது
Poco X8 Pro மற்றும் Poco X8 Pro Max விலை தகவல்
POCO X8 Pro விலை :
இந்தியாவில் Poco X8 Pro 5G-யின் விலை, 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை வேரியண்ட்டிற்கு ரூ. ₹29,999-இல் தொடங்குகிறது. அதே சமயம், டாப்-ஆஃப்-லைன் 12GB+256GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 32,999 ஆகும். இந்தியாவில் Poco X8 Pro 5G Iron Man Edition-இன் விலை, ஒரேயொரு 12GB+256GB வேரியண்ட்டிற்கு ரூ. ₹34,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போகோ X8 ப்ரோ அயர்ன் மேன் எடிஷன்:
12ஜிபி + 256ஜிபி: ரூ 34,999
POCO X8 Pro Max விலை மறுபுறம், இந்தியாவில் Poco X8 Pro Max 5G-யின் விலை, 12GB+256GB ஆப்ஷனுக்கு ரூ. ₹39,999-இல் இருந்து தொடங்குகிறது. இறுதியாக, 12GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் வழங்கும் டாப்-எண்ட் மாடலின் விலை ரூ. 43,999 ஆகும். இருப்பினும், இந்த விலைகளில் HDFC பேங்க் , ICICI பேங்க் மற்றும் SBI கார்டுகள் மூலம் பெறக்கூடிய வங்கி தள்ளுபடிகள் மற்றும் அறிமுகச் சலுகைகள் அடங்கும்.
புதிய போன்கள் மார்ச் 23 அன்று இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு Flipkart வழியாக இந்தியாவில் விற்பனைக்கு வரும். Poco X8 Pro 5G கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை வண்ணங்களில் வழங்கப்படும் நிலையில், Poco X8 Pro Max 5G கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile