7,200mAh பேட்டரியுடன் Vivo T5x 5G போன் அறிமுகம் விலை அம்சங்கள் அனைத்தையும் தெருஞ்சிகொங்க

HIGHLIGHTS

Vivo இந்திய சந்தையில் அதன் Vivo T5x 5G போனை அறிமுகம் செய்தது

இந்த போனில் 7200mAh பேட்டரியுடன் இதில் 44W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது

மேலும் இந்த போனின் விலை அம்சங்கள் பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.

7,200mAh பேட்டரியுடன் Vivo T5x 5G போன் அறிமுகம் விலை அம்சங்கள் அனைத்தையும் தெருஞ்சிகொங்க

Vivo இந்திய சந்தையில் அதன் Vivo T5x 5G போனை அறிமுகம் செய்தது, இந்த போனில் 7200mAh பேட்டரியுடன் இதில் 44W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது, இதனுடன் இந்த போனில் மீடியாடேக் டிமான்சிட்டி 7400 டர்போ ப்ரோசெசர் கொண்டுள்ளது மேலும் இந்த போனின் விலை அம்சங்கள் பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vivo T5x 5G விலை தகவல்

விவோ T5x 5G, 6GB+128GB ஸ்டோரேஜ் வேரியண்ட்டிற்கு ₹18,999 , 8GB+128GB ஸ்டோரேஜ் வேரியண்ட்டிற்கு ₹20,999 மற்றும் 8GB+256GB ஸ்டோரேஜ் வேரியண்ட்டிற்கு ₹22,999 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவோ T5x 5G, ஸ்டார் சில்வர் மற்றும் சைபர் கிரீன் ஆகிய கலர்களில் கிடைக்கிறது. இது மார்ச் 24 முதல் Flipkart மற்றும் விவோ இந்தியா இ-ஸ்டோர், அத்துடன் பார்ட்னர் ரீடைளர் விற்பனைக் கடைகளிலும் கிடைக்கும். அறிமுகச் சலுகையாக, ஆக்சிஸ் வங்கி, HDFC வங்கி மற்றும் SBI கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தும்போது ரூ,2,000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்டை பெறலாம். 6 மாதங்கள் வரை நோ கோஸ்ட் EMI வசதியும் உள்ளது.

Vivo T5x 5G சிறப்பம்சம்.

Vivo T5x 5G போனில் 6.76-இன்ச் ஃபுல்-HD+ (1,080×2,344 பிக்சல்கள்) LCD பேனலைக் கொண்டுள்ளது, இதனுடன் இந்த போனில் 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது . இந்தத் ஸ்க்ரீன் 1200 நிட்ஸ் வரையிலான ஹை ப்ரைட்னஸ் வழங்கும் எனக் கூறப்படுகிறது.

விவோ T5x 5G, ஆக்டா-கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7400 டர்போ சிப்செட்டில் இயங்குகிறது. இது 8GB வரையிலான ரேம் மற்றும் 256GB வரையிலான ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.இதனுடன் இந்த போனில் இரட்டை சிம் (நானோ) வசதி கொண்ட விவோ T5x 5G, ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஆரிஜின்ஓஎஸ் 6-ல் இயங்குகிறது.

கேமராக்களைப் பொறுத்தவரை, இதில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில் 50-மெகாபிக்சல் சோனி IMX852 சென்சார் மற்றும் 2-மெகாபிக்சல் போக்கே ஷூட்டர் ஆகியவை முதன்மை அம்சங்களாக உள்ளன. முன்புறத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 32-மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றுள்ளது.

விவோ T5x 5G, 44W வயர்டு சார்ஜிங் வசதியுடன் 7,200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரி, ஒரே சார்ஜில் 40 மணிநேரம் வரை வீடியோ, 93 மணிநேரம் வரை இசை மற்றும் 14.5 மணிநேரம் வரை நேவிகேஷன் நேரத்தை வழங்கும் என விளம்பரப்படுத்தப்படுகிறது. இந்த போனில் , டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்டிர்க்காக IP68 மற்றும் IP69 ரேட்டிங் கொண்டுள்ளது. இதன் டைமென்ஷன் சுமார் 166×78.43×8.3 mm மற்றும் எடை 219 கிராம் ஆகும்.

விவோ T5x 5G-யில் உள்ள கனெக்ஷன் விருப்பங்களில் 5G, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், பெய்டூ, குளோனாஸ், கலிலியோ, QZSS, வைஃபை மற்றும் ஒரு USB டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். இதில் உள்ள சென்சார்களில் ஆக்சிலரோமீட்டர், சுற்றுப்புற ஒளி சென்சார், இ-காம்பஸ், கைரோஸ்கோப் மற்றும் ப்ராக்சிமிட்டி சென்சார் ஆகியவை அடங்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo