Poco X8 launching with new look and new features
Poco இந்தியாவில் அதன் Poco X8 சீரிஸ் அறிமுகம் செய்தது. இந்த பிரிவின் கீழ் நிறுவனம் அதன் Poco X8 Power மற்றும் Poco X8 ஆகிய போன்களை அறிமுகம் செய்தது. இந்த போன்களில் அதன் ஹைலைட் பேட்டரி தான் Poco X8 Power யில் 10,000mAh பேட்டரி மற்றும் அதன் Poco X8 யில் 9,000mAh பேட்டரியும் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பார்க்கலாம் வாங்க.
POCO X8 மாடலின் ஆரம்ப விலை ரூ. 29,999 ஆகவும் , POCO X8 Power மாடலின் விலை ரூ. 35,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது . அறிமுகச் சலுகையின் ஒரு பகுதியாக, வாங்குபவர்கள் ரூ. 2,000 கூப்பன் டிஸ்கவுன்ட் மற்றும் ரூ. 1,000 பேங்க் சலுகை அல்லது எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகியவற்றைப் பெறலாம். இதன் மூலம், அவற்றின் பயனுள்ள விலைகள் முறையே ரூ. 26,999 மற்றும் ரூ. 32,999 ஆகக் குறைகின்றன.
இந்த இரண்டு போன்களும் செப்டம்பர் 11, 2026 அன்று மதியம் 12 மணி முதல், பிரத்தியேகமாக ஃபிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும். போகோ நிறுவனம், X8 மாடலுக்கு மாதம் ரூ. 2,250 மற்றும் X8 பவர் மாடலுக்கு மாதம் ரூ. 2,750 என்ற ஆரம்பத் தொகையுடன் 12 மாத வட்டியில்லா EMI வசதியையும் வழங்குகிறது.
POCO X8 Power அம்சங்களை பற்றி பேசினால். இதில் 6.83 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே உடன் இது 120Hz ரெப்ரஸ் ரேட்HDR10+ மற்றும் Dolby Vision சப்போர்டுடன் வருகிறது, இதனுடன் இந்த போன் 3,500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் சப்போர்ட் வழங்குகிறது இதனுடன் இதில் மிக சிறந்த பாதுகாப்புக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் ௨ ப்ரொடெக்ஷன் 2 மற்றும் TUV Triple Eye ப்ரொடெக்ஷன் வழங்குகிறது.
மேலும் இந்த போனில் பவர்புல் பர்போமன்சுக்கு Snapdragon 6 Gen 5 ப்ரோசெசருடன் 12GB யின் LPDDR5X RAM மற்றும் 256GB யின் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, இதனுடன் Xiaomi HyperOS 3 அடிபடையின் கீழ் Android 16 யில் இயங்குகிறது இதுதான் 4 OS அப்க்ரேட் மற்றும் 6 ஆண்டு வரையிலான செக்யூரிட்டி அப்டேட் ஆகியவை வழங்கப்படுகிறது.
இந்த போனில் கேமரா அம்சங்கள் பொறுத்தவரை இதில் ப்ரைமரி 50MP OS கேமரா மற்றும் 8MP அல்ட்ரா வைட் ஆகியவை வழங்கப்படுகிறது, இதனுடன் செல்பிக்கு 32MP முன் கேமரா கொண்டுள்ளது
பேட்டரிக்கு POCO X8 Power யில் 10,000mAh பேட்டரியுடன் 100W HyperCharge மற்றும் 27W ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது மற்றும் இந்த போனின் இடை 229g கிராம் இருக்கிறது மேலும் இந்த போன அதிகா நாள் நீடிதுலைக்க IP66, IP68, IP69 and IP69K சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க iPhone பிரியர்களுக்கு குட் நியூஸ் ரூ,4000 அதிரடி டிஸ்கவுண்ட் உடன் கம்மி விலையில் வாங்கலாம்
போகோ X8 , X8 பவருடன் 1.5K AMOLED டிஸ்ப்ளே , கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு, உள்ளே, X8 ஆனது ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 பிராசஸரைப் பயன்படுத்துகிறது, இது 8GB LPDDR4X ரேம் மற்றும் 256GB வரை ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது . 256GB மாடல் பாஸ்ட் UFS 3.1 ஸ்டோரேஜைப் வழங்குகிறது , அதே நேரத்தில் 128GB வெர்ஷன் UFS 2.2 ஐப் பயன்படுத்துகிறது . இந்த ஃபோனில் OIS உடன் கூடிய 50MP ப்ரைமரி பின்புற கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார், அத்துடன் 16MP முன்புற கேமராவும் உள்ளது
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் IP66, IP68, IP69, IP69K மதிப்பீடுகள் உட்பட பல வன்பொருள்களைப் பகிர்ந்து கொள்கிறது. முக்கிய வேறுபாடு பேட்டரி மற்றும் சார்ஜிங் அமைப்பில் உள்ளது. இது 67W ஹைப்பர்சார்ஜ் மற்றும் 22.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங்குடன் கூடிய, அதே அளவு பெரிய 9,000mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரியைக் கொண்டுள்ளது . இதனால் இது X8 பவரை விட சற்றே எடை குறைவாகவும் (226g) மற்றும் திக்னஸ் (8.6mm) குறைவாகவும் உள்ளது.
பெரிய பேட்டரியை மேனேஜ் செய்ய உதவும் வகையில், போக்கோ தனது சர்ஜ் ஜி1 பேட்டரி மேலாண்மை சிப்பை இதில் சேர்த்துள்ளது. அதே சமயம், இந்த ஃபோன் எக்ஸ்8 பவரின் நீடித்து உழைக்கும் தன்மை மீதான கவனத்தைத் தக்கவைத்துக்கொண்டு, டைட்டன் தர முத்திரை மற்றும் இரட்டை ஐந்து நட்சத்திர எஸ்ஜிஎஸ் மற்றும் TUV சான்றிதழ்களைப் பெற்றுள்ளது. இது சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3-இல் இயங்குகிறது மற்றும் அதன் முந்தைய மாடலைப் போன்றே அதே சாப்ட்வேர் சப்போர்ட்டை வழங்குகிறது.