Apple புதிய போனின் முதல் விற்பனையின் கீழ் பேங்க் ஆபருடன் வெறும் 55,900ரூபாயில் தரமான சம்பவம் இருக்கு
Apple யின் iPhone 16 சீரிஸ் கீழ் சில நாட்களுக்கு முன் அதன் iPhone 16e போனை அறிமுகம் செய்தது, iPhone 16e யின் இந்த போனை இன்னும் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டது,மேலும் இது என்ட்ரி லெவல் போநகும் ஆப்பிளின் எகொசிஸ்டம் அமைப்பு மற்றும் ஆப்பிள் அனுபவத்தை விரும்புவோரை இலக்காகக் கொண்டது, ஆனால் அதிக கட்டணம் செலுத்த விரும்பவில்லை. இன்று இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் iPhone 16e யின் முதல் விற்பனையைக் குறிக்கிறது. அதன் விலை, கிடைக்கும் தன்மை மற்றும் வெளியீட்டு சலுகைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே உள்ளன.
SurveyiPhone 16e ஆபர் விலை மற்றும் டிஸ்கவுன்ட்
iPhone 16e போனை இப்பொழுது அமேசானில் இதன் 128GB ஸ்டோரேஜ் 59,900ரூபாயில் லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதன் 256GB ஸ்டோரேஜ் விலை 69,900ரூபாயாகவும் மற்றும் இதன் 512GB ஸ்டோரேஜ் மாடலின் விலை 89,900ரூபாயாகவும் அறிமுகம் செய்யப்பட்டது
அறிமுக சலுகை
இந்த போனின் அறிமுக சலுகையாக iPhone 16e போனை பேங்க் ஆபர் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும். அதாவது பேங்க் ஆபரின் மூலம் 4,000ரூபாய் குறைக்கப்படுகிறது, இதை தவிர நீங்கள் நோ கோஸ்ட் EMI மூலமும் இந்த போனை வாங்கலாம் Amazon Pay பேலன்ஸ் ICICI பேங்க் கிரெடிட் பயன்படுத்தினால் இன்ஸ்டன்ட் கேஷ்பேக் பெறலாம் இதை தவிர நீங்கள் அதன் அதிகாரபூர்வ ஆப்பிளின் வெப்சைட்டின் மூலம் நிங்கள் நோ கோஸ்ட் எமி மூலாம் வாங்கலாம்.
Apple iPhone 16e சிறப்பம்சங்கள்
ஐபோன் 16e ஆனது 6.1-இன்ச் OLED 460ppi சூப்பர் ரெடினா XDR டிஸ்ப்ளேவை 2532×1170 பிக்சல்கள் ரேசளுசன் , 800 nits ப்ரைட்னாஸ் மற்றும் 1200 nits ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே பீங்கான் கவச பாதுகாப்புடன் பொருத்தப்பட்டுள்ளது. இது 6-கோர் A18 செயலியைக் கொண்டுள்ளது. இந்த போன் iOS 18 இல் வேலை செய்கிறது. இந்த ஐபோன் வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது. கனெக்சன் விருப்பங்களில் இரட்டை சிம், வைஃபை 7, புளூடூத் 5.3, ரீடர் பயன்முறையுடன் கூடிய NFC, GPS, GLONASS, கலிலியோ, QZSS மற்றும் BeiDou ஆகியவை அடங்கும்.
கேமரா அமைப்பைப் பொறுத்தவரை, iPhone 16e-யின் பின்புறம் f/1.6 துளை கொண்ட 48-மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமராவையும், f/1.9 துளை கொண்ட 12-மெகாபிக்சல் முன்பக்க கேமராவையும் கொண்டுள்ளது. இது ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் 26 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக் கொண்ட உள்ளமைக்கப்பட்ட ரீசார்ஜ் செய்யக்கூடிய லித்தியம்-அயன் பேட்டரியுடன் வருகிறது. முக அடையாளம் முக அங்கீகாரம் சேர்க்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க இந்த iPhone யில் கிடைக்கிறது அதிரடியாக டிஸ்கவுண்ட் பேங்க் ஆபருடன் வெறும் ரூ,65,900 யில் வாங்கலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile