Moto G8 Power Lite 5000Mah பேட்டரியுடன் அறிமுகமானது.

HIGHLIGHTS

மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போனினை அறிமுகம்

விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் மே 29 ஆம் தேதி துவங்குகிறது.

Moto G8 Power Lite 5000Mah  பேட்டரியுடன் அறிமுகமானது.

மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

மோட்டோ ஜி8 பவர் லைட் சிறப்பம்சங்கள்

– 6.5 இன்ச் 1600×720 பிக்சல் HD+ 20:9 LCD ஸ்கிரீன்
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
– IMG பவர்விஆர் GE8320 GPU
– 4 ஜிபி LPDDR4x ரேம்
– 64 ஜிபி eMMC 5.1 மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9 பை
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
– 2 எம்பி மேக்ரோ சென்சார்
– 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4, 1.75µm பிக்சல்
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
– ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– மைக்ரோ யுஎஸ்பி
– 5000 எம்ஏஹெச் பேட்டரிட
– 10 வாட் ரேபிட் சார்ஜிங்

புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கிரேடியண்ட் பிளாஸ்டிக் பேக் கொண்டிருக்கும் மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்கள், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போன் ராயல் புளூ மற்றும் ஆர்க்டிக் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 8999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் மே 29 ஆம் தேதி துவங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile