Truecaller யின் வந்துள்ளது Scam Checkerஅம்சம் இனி எந்த ஒரு மெசேஜை பார்த்தே கணிபிகலாம் எது போலி மற்றும் நிஜம்

HIGHLIGHTS

Truecaller ஞாயிற்றுக்கிழமை அன்று புதிய Scam Checker அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது

பயனர்கள் சந்தேகத்திற்குரிய போன் நம்பர்கள் , வெப்லிங்க்கள் அல்லது மெசேஜ்களைச் சரிபார்க்க முடியும்

இந்த Scam Checker அம்சமானது Android பயனர்களுக்கு கொண்டு வரப்பட்டது

Truecaller யின் வந்துள்ளது Scam Checkerஅம்சம் இனி எந்த ஒரு மெசேஜை பார்த்தே கணிபிகலாம் எது போலி மற்றும் நிஜம்

Truecaller ஞாயிற்றுக்கிழமை அன்று புதிய Scam Checker அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், பயனர்கள் சந்தேகத்திற்குரிய போன் நம்பர்கள் , வெப்லிங்க்கள் அல்லது மெசேஜ்களைச் சரிபார்க்க முடியும். தங்களுக்கு வந்துள்ள குறுஞ்செய்தி அல்லது வெப் லிங்க் ஏதேனும் மோசடியுடன் தொடர்புடையதா என்பதைத் தீர்மானிக்க, நிறுவனத்தின் இந்த புதிய அம்சம் மக்களுக்கு உதவும். இந்தியாவில் இந்த Scam Checker அம்சமானது Android பயனர்களுக்கு கொண்டு வரப்பட்டது, இருப்பினும் இதில் வெப் வெர்ஷன் இதன் வெப் வெர்ஷன் உலகெங்கிலும் பயன்படுத்தப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Scam Checker யின் கீழ் பயனர்கள் எந்த ஒரு தெரியாத அல்லது சந்தேகமான நம்பரையும் நீங்கள் இங்கு சரி பார்க்கலாம். இந்த டூல் ட்ரூ காலரில் இருக்கும் ஸ்கேம் டிடக்ஷன் சிஸ்டம் மற்றும் கம்யூனிட்டி யில் சேர்க்கப்படும் சிக்னல்ஸ் பயன்படுத்தப்படுகிறது. ஒரு தொலைபேசி எண் குறித்து ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டிருந்தாலோ அல்லது அதனுடன் தொடர்புடைய சந்தேகத்திற்கிடமான செயல்பாடு குறித்த தகவல் இருந்தாலோ, பயனர் அந்த விவரங்களைப் பார்வையிட முடியும். பிற பயனர்களால் புகாரளிக்கப்பட்ட மோசடிகள் குறித்த தகவல்களையும் Truecaller-இன் ‘ScamFeed’-இல் காணலாம்.

எந்த ஒரு லிங்கை திறப்பதற்கு முன் முதலில் அதை சரி பார்க்க வேண்டும்.

இந்தப் புதிய டூலின்மூலம், சந்தேகத்திற்கிடமான லிங்க்புகளைத் திறப்பதற்கு முன்பே சரிபார்க்க முடியும். உதாரணமாக, வாட்ஸ்அப், எஸ்எம்எஸ் அல்லது Email வழியாக ஒரு லிங்க் தோன்றி, அது பேங்க் , டெலிவரி, ரிவார்ட், வேலை அல்லது அரசாங்க சேவை என்று கூறிக்கொள்கிறது என வைத்துக்கொள்வோம். பயனர்கள் அந்த லிங்கை’ஸ்கேம் செக்கர்’ (Scam Checker) டூலில் உள்ளிட்டுச் சரிபார்க்கலாம். இந்தக் டூல், ஷர்ட்URL-கள் மற்றும் வழிமாற்றங்களையும் கண்டறிந்து, கிடைக்கக்கூடிய இடர் சமிக்ஞைகளின் அடிப்படையில் தகவல்களை வழங்குகிறது.

இதையும் படிங்க வேற லெவல் டிஸ்கவுண்டில் MOTOROLA யின் சூப்பர் மாடல் ஒரே அடியாக ரூ,40,000 குறைப்பு டாப் அம்சங்கள்

மெசேஜ்களையும் ஸ்கேன் செய்ய முடியும்.

ட்ரூகாலர், மோசடி சரிபார்ப்புக் கருவியை வெறும் போன் நம்பர்கள் மற்றும் லின்க்களுக்கு மட்டும் கட்டுப்படுத்தவில்லை. பயனர்கள் சந்தேகத்திற்கிடமான மெசேஜ்களை விசாரிக்கவும் இதைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, ஒரு மெசெஜின் அக்கவுண்டை மூடுதல், பணம் செலுத்துதல், KYC அப்டேட்கள் அல்லது பரிசைப் பெறுதல் போன்ற கோரிக்கைகள் இருந்தால், பயனர்கள் அதை விசாரிக்கலாம். இந்த சிஸ்டம் , மேசெஜிஜ் உள்ள நம்பர் அல்லது லிங்கை அடையாளம் கண்டு, கிடைக்கக்கூடிய மோசடித் தகவல்களைக் காண்பிக்கும்.

மேலும் நிறுவனம் கூறியது என்னவென்றால் Scam Checker

பின் வரும் காலத்தில் மேலும் பல அப்டேட் வழங்கும் என கூறுகிறது. எதிர்காலத்தில், சந்தேகத்திற்குரிய குறுஞ்செய்திகள் (SMS) அல்லது உரையாடல்களை அவற்றின் திரைப்பிடிப்புகளைப் (screenshots) பதிவேற்றுவதன் மூலம் சரிபார்க்கும் வசதி சேர்க்கப்படலாம். இருப்பினும், ஒரு குறிப்பிட்ட நம்பர் அல்லது லிங்க்கு எதிராக எந்தப் புகாரும் இல்லை என்பது, அது முற்றிலும் பாதுகாப்பானது என்பதற்கு உத்தரவாதம் அளிக்காது. எனவே, பேங்க் விவரங்கள், OTP-கள், கடவுச்சொற்கள் அல்லது பணம் செலுத்துதல் தொடர்பான தகவல்களைப் பகிர்வதற்கு முன், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் அல்லது ஆப் (app) மூலம் அந்த விவரங்களைச் சரிபார்ப்பது அவசியமாகும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile