LG Q Stylus+முழுவிசன் டிஸ்பிளே மற்றும் பல அசத்தல் அம்சங்களுடன் அறிமுகம்…!

LG Q Stylus+முழுவிசன் டிஸ்பிளே மற்றும் பல அசத்தல் அம்சங்களுடன் அறிமுகம்…!
HIGHLIGHTS

LG அதன் LG Q Stylus வரிசையில் ஜூன் மாதத்தில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த தொடரில் மூன்று ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது

LG  அதன்  LG Q Stylus வரிசையில் ஜூன் மாதத்தில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த தொடரில் மூன்று ஸ்மார்ட்போன்கள்  அடங்கியுள்ளது அதில்  G Q Stylus, LG Q Stylus+ மற்றும் LG Q Stylus A ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது

LG  நிறுவனத்தின் LG Q Stylus ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எல்ஜி கடந்த ஆண்டு அறிமுகம் செய்திருந்த ஸ்டைலஸ் 3 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும்.

புதிய க்யூ ஸ்டைலஸ் மாடலில் 6.2 இன்ச் FHD பிளஸ் ஃபுல் விஷன் டிஸ்ப்ளே, 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் சிப்செட், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

எல்ஜி ஸ்மார்ட்போனில் MIL-STD 810G சான்று பெற்ற ராணுவ தரம் கொண்ட டியூரபிலிட்டி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

LG Q Stylus Plus சிறப்பம்சங்கள்:

– 6.2 இன்ச் 18:9 FHD+ 2160×1080 பிக்சல் 18:9 ஃபுல் விஷன் 389ppi 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் மீடியாடெக் MT6750S பிராசஸர்
– மாலி T860 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி மெமரி
– மெமரியை நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், PDAF
– 8 எம்பி முன்பக்க கேமரா
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810G சான்று
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி 2.0
– 3,300 Mah . பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

LG Q Stylus Plus ஸ்மார்ட்போன் அரோரா பிளாக் மற்றும் மொரக்கன் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 5-ம் தேதி முதல் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் ரூ.21,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo