Lava Yuva 3 ஸ்மார்ட்போன் 5000Mah பேட்டரியுடன் அறிமுகம்

Lava Yuva 3 ஸ்மார்ட்போன் 5000Mah பேட்டரியுடன் அறிமுகம்

Lava நிறுவனம் புதிய குறைந்த விலை ஸ்மார்ட்போனான Lava Yuva 3ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. யுவா 3 6.5 இன்ச் HD + பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா உள்ளது. Yuva 3 யின் அம்சங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் , விலை போன்றவற்றைப் பற்றி இங்கு விரிவாகக் பார்க்கலாம்.

Lava Yuva 3 யின் விலை தகவல்

விலையைப் பற்றி பேசினால், லாவாYuva 3 யின் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.6,799 மற்றும் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.7,299. இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி 7 முதல் இ-காமர்ஸ் தளமான அமேசானில் விற்பனைக்கு கிடைக்கும். இது பிப்ரவரி 10, 2024 முதல் லாவாவின் சில்லறை நெட்வொர்க் மற்றும் லாவா இ-ஸ்டோரில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் Eclipse Black, Cosmic Lavender மற்றும் Galaxy White கலர்களில் கிடைக்கும்.

Lava Yuva 3
Lava Yuva 3

Yuva 3 சிறப்பம்சம்

Lava Yuva 3 யின் சிறப்பம்சம் பற்றி பேசினால், 6.5 இன்ச் யின் HD+ பன்ச் ஹோல் டிஸ்பிளே வழங்கப்படுகிறது , இதன் ரெஸலுசன் 720*1600 பிக்சல்கள் மற்றும் ரெஃப்ரஷ் ரெட் 90Hz. இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் உள்ளது, இதை விர்ச்சுவல் ரேம் மூலம் 4ஜிபி வரை அதிகரிக்கலாம். 64 ஜிபி அல்லது 128 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பம் உள்ளது, இதை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை அதிகரிக்கலாம் . யுவா 3 UNISOC T606 ஆக்டா கோர் செயலியைக் கொண்டுள்ளது. இந்த ஃபோனில் 5000mAh பேட்டரி உள்ளது, இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது

lava yuva 3 pro
#Yuva 3

கேமரா பற்றி பேசுகையில் .இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் டிரிபிள் ஏஐ பின்புற கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13ல் வேலை செய்கிறது. நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் மற்றும் Android 14 க்கு மேம்படுத்துகிறது. செக்யுரிட்டிக்காக , இந்த ஃபோன் ஃபேஸ் அன்லாக் அம்சத்துடன் வருகிறது.

இதையும் படிங்க:Bye, Bye Nokia:மக்களின் மனதை கவர்ந்த Nokia என்ற பெயர் இனி இருக்காது

யுவா 3 பிரீமியம் பேக் டிசைனுடன் பக்கவாட்டு பிங்கர்ப்ரின்ட் சென்சார் கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி விருப்பங்களில் 4G, Wi-Fi 802.11 b/g/n/ac, USB Type C port, Bluetooth V5.0 மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவை அடங்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo