Lava யின் புதிய போன் கம்மி விலையில் 50MP AI கேமராவுடன் அறிமுகம்

HIGHLIGHTS

Lava பட்ஜெட் விலையில் அதன் குறைந்த விலை போன் ஆன அறிமுகம் செய்தது

லாவா நிறுவனம் புதிய Lava Shark 2 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது,

இந்தியாவில் லாவா ஷார்க் 2-ஐ ரூ,7,500க்கு வாங்கலாம்.

Lava யின் புதிய போன் கம்மி விலையில் 50MP AI கேமராவுடன் அறிமுகம்

Lava பட்ஜெட் விலையில் அதன் குறைந்த விலை போன் ஆன அறிமுகம் செய்தது லாவா நிறுவனம் புதிய Lava Shark 2 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, இது அமைதியாக சில்லறை விற்பனைக் கடைகளில் கிடைக்கிறது. இந்த தொலைபேசி 6.75-இன்ச் HD+ டிஸ்ப்ளேவை நாட்ச் டிசைனுடன் கொண்டுள்ளது. LCD பேனல் Unisoc T7250 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் Android 15 போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது மேலும் இதன் ஆபர் மற்றும் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Lava Shark 2 டிஸ்கவுண்ட் நன்மை

இந்தியாவில் லாவா ஷார்க் 2-ஐ ரூ,7,500க்கு வாங்கலாம். நிறுவனம் 4GB RAM, 64GB ஸ்டோரேஜ் கொண்ட சிங்கிள் வேரியன்ட் அறிமுகப்படுத்தியுள்ளது. போனில் உடனடி தள்ளுபடியும் உண்டு. போனை வாங்கும்போது ₹750 தள்ளுபடி வழங்கப்படுகிறது, இதன் பயனுள்ள விலை ₹6,750 ஆக உள்ளது. நிறுவனம் எந்த இ-காமர்ஸ் தளத்திலும் போனை பட்டியலிடவில்லை. இதை ரீடைலர் விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்க முடியும். போன் கருப்பு மற்றும் சில்வர் கலர் வகைகளில் கிடைக்கிறது.

Lava Shark 2 சிறப்பம்சம்.

லாவா ஷார்க் 2 ஸ்மார்ட்போன் 6.75-இன்ச் HD+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. LCD பேனல் நாட்ச் டிசைனை கொண்டுள்ளது. இந்த போன் 120Hz ரெப்ரஸ் ரேட்டை கொண்டுள்ளது. இந்த போன் Unisoc T7250 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 4GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், RAM ஐ 4GB வரை அதிகரிக்க முடியும். இந்த போன் ஆண்ட்ராய்டு 15 இல் இயங்குகிறது.

கேமராவைப் பொறுத்தவரை, இது 50 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. இந்த போனில் 18W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் கூடிய பெரிய 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த தொலைபேசி தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP54 மதிப்பிடப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo