iQOO Neo 9 Pro இந்தியாவில் அறிமுகம் இதன் டாப் அம்சங்கள் பாருங்க

iQOO Neo 9 Pro இந்தியாவில் அறிமுகம் இதன் டாப் அம்சங்கள் பாருங்க

iQOO இந்த ஆண்டிற்கான ஸ்மார்ட்போன்களின் வலுவான வரிசையைக் கொண்டிருப்பது போல் தெரிகிறது. இப்போது, ​​விவோவின் இந்த சப் பிராண்ட் மற்றொரு மிட்ரேஞ் ஸ்மார்ட்போனுடன் வந்துள்ளது. சீன பிராண்ட் இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்திய iQOO Neo 9 Pro பற்றி பேசினால்,. ரூ. 40,000க்கு கீழ் அறிமுகமாகியுள்ளது சரி வாருங்கள் இதன் டிசைன், சிறப்பம்சம் விலை மற்றும் பல அம்சங்களின் தகவல்களி பார்க்கலாம்

iQOO Neo 9 Pro விலை தகவல்.

iQOO Neo 9 Pro விலை பற்றி பேசினால் இந்த போனில் 35,999ரூபாயின் ஆரம்ப விலையில் வருகிறது, அமேசான் மூலம் வாங்கலாம். இதனுடன், பிராண்ட் ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎஃப்சி வங்கி அட்டைகளில் ரூ.2000 வெளியீட்டு தள்ளுபடியையும் வழங்குகிறது.

iQOO Neo 9 Pro டிசைன்

இந்த புதிய ஸ்மார்ட்போனின் டிசைனை பற்றி பேசுகையில், மேல் இடது மூலையில் இரண்டு பெரிய கேமரா ரிங்கள் வேகன் லெதர் பேக் உடன் வருகிறது. இது ஒரு தட்டையான டிசைனை கொண்டுள்ளது மற்றும் இரண்டு கலர் விருப்பங்களில் கிடைக்கிறது; ‘கருப்பு’ மற்றும் ‘சிவப்பு மற்றும் வெள்ளை’ டுயள் டோனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, இதன் எடை 190 கிராம் மற்றும் தடிமன் 7.99 mm ஆகும்

iQOO Neo 9 Pro டிஸ்ப்ளே

Neo 9 Pro யின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில் 6.78 இன்ச் LTPO AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது, இது 1260 x 2800 பிக்சல் ரேசளுசன் 144Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் வழங்குகிறது

Neo 9 Pro ப்ரோசெச்சர்

சிறந்த பர்போமன்சுக்காக இந்த போனில் Snapdragon 8 Gen ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது. இது 2023 யின் ப்ளாக்ஷிப் ப்ரோசெசர் ஆகும் இது இந்த ஸ்மார்ட்போனில் Q1 கம்ப்யூட்டிங் சிப் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

Neo 9 Pro ரேம் மற்றும் ஸ்டோரேஜ்

இந்த போனில் 12GB ரேம் மற்றும் 256GB வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது சாப்ட்வேர் பற்றி பேசுகையில் ஐகூ போனில் பண்டச் OS 14 யில் ஆண்ட்ரோய்ட் அடிப்படையில் இயங்குகிறது.

இதையும் படிங்க: BSNL தமிழ்நாட்டுக்கு Copper to Fiber சேவை கொண்டு வருகிறது இதனால் என்ன பயன்

Neo 9 Pro கேமரா

இந்த போனின் கேமரா பற்றி பேசுகையில் இதில் டுயல் கேமரா செட்டப் இருக்கிறது இதில் 50MP Sony IMX882 OIS பிரதான கேமரா மற்றும் 8MP அல்ட்ராவைட் லென்ஸ் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில் 16MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது.

Neo 9 Pro பேட்டரி

இந்த போனில் 5160mAh பேட்டரியில் இருந்து பவர் கொடுக்கும் இது 120-W வரை பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்டை வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo