Vivo இரண்டு புதிய போன் அறிமுகத்திற்கு ரெடி தேதி அம்சங்கள் அனைத்தையும் பாருங்க

HIGHLIGHTS

Vivo இரண்டு புதிய Vivo V70 மற்றும் Vivo V70 Elite.போன்களை அறிமுகம் செய்ய தயார் செய்து வருகிறது

தற்பொழுது இந்த போனின் தகவல் மற்றுமரிமுக தேதி போன்றவை வெளியே வந்துள்ளது

விவோ வி70 ரூ.40,000 க்கும் குறைவான பிரிவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Vivo இரண்டு புதிய போன் அறிமுகத்திற்கு ரெடி தேதி அம்சங்கள் அனைத்தையும் பாருங்க

Vivo அதன் பாப்புலர் பிரெண்ட் மட்டுமல்லாமல் விவோ என்றாலே மிக சிறந்த கேமரா அம்சம் தான், மேலும் இந்த சீரிஸ் கீழ் அதன் இரண்டு புதிய Vivo V70 மற்றும் Vivo V70 Elite.போன்களை அறிமுகம் செய்ய தயார் செய்து வருகிறது மேலும் இந்த இரண்டு போன்களும் V-சீரிஸ் கீழ் அறிமுகம் செய்யப்படும் என்பது தெளிவாக தெரிகிறது மேலும் தற்பொழுது இந்த போனின் தகவல் மற்றுமரிமுக தேதி போன்றவை வெளியே வந்துள்ளது அவை என்ன என்பதை முழுசா பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vivo V70 மற்றும் Vivo V70 Elite தேதி

டிசம்பர் 2025 இல் சீனாவில் அறிமுகமான S50 தொடரின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக Vivo V70 சீரிஸ் வரக்கூடும் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது. Vivo இன்னும் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், பிப்ரவரி 19 முதல் மார்ச் 15 வரை இயங்கும் இந்தியாவுக்கான குறிப்பிட்ட “AI ஹோலி போர்ட்ரெய்ட்” என இருக்கிறது அதாவது , ஹோலி பண்டிகை அன்று அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

Vivo V70 மற்றும் Vivo V70 Elite சிறப்பம்சம்.

இரண்டு மாடல்களும் 1.5K ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ரஸ் ரெட்டுடன் 6.59-இன்ச் OLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவோ 5,000 நிட்களின் ஹை ப்ரைட்னஸ் அளவைக் கொண்டுள்ளது என்று கூறுகிறது. இந்த போன்கள் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் IP68 மற்றும் IP69 ரெட்டிங்க்களை கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Vivo V70 Elite ஸ்மார்ட்போன் Snapdragon 8s Gen 3 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் Vivo V70 ஸ்மார்ட்போன் Snapdragon 7 Gen 4 சிப்பைப் பயன்படுத்தலாம். பட்டியலிடப்பட்ட ஒரு Elite வேரியண்டில் 8GB LPDDR5X RAM மற்றும் 256GB UFS 4.1 ஸ்டோரேஜ் உள்ளது.

விவோ நிறுவனம், V70 சீரிஸ்க்காக Zeiss உடனான தனது கூட்டணியைத் தொடரும். போட்டோ எடுப்பதற்கு, இந்த போனில் ஆப்டிகல் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 50MP பிரதான சென்சார், 50MP டெலிஃபோட்டோ கேமரா மற்றும் பின்புறத்தில் ஒரு அல்ட்ரா-வைட் லென்ஸ் ஆகியவை இருக்கலாம். இந்த சாதனங்கள் வினாடிக்கு 60 பிரேம்களில் 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 4K HDR வீடியோவையும் சப்போர்ட் செய்யலாம் . செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்க்ஹ்க முன்புறத்தில் 50MP கேமராவும் இதில் இடம்பெற வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க:Samsung யின் புது போன் அறிமுகம் செய்யும் குஷியில் இந்த சூப்பர் ஸ்டைலிஷ் மாடலில் அதிரடியாக ரூ,13,000 டிஸ்கவுண்ட்

மேலும், V70 சீரிஸில் 90W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் சப்போர்டுடன் 6,500mAh பேட்டரி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில் அல்ட்ராசோனிக் பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் லீனியர் வைப்ரேஷன் மோட்டாரும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாப்ட்வேர் பக்கத்தில், Vivo V70 வரிசை Android 16-அடிப்படையிலான OriginOS 6 உடன் அனுப்பப்படலாம், நான்கு ஆண்டுகள் வரை சிஸ்டம் அப்டேட்கள் மற்றும் ஆறு ஆண்டுகள் பாதுகாப்பு கனேக்ஷனுடன் வருகிறது.

Vivo V70 மற்றும் Vivo V70 Elite விலை தகவல்.

ஆண்ட்ராய்டு ஹெட்லைன் அறிக்கையின்படி, இந்தியாவில் விவோ வி70 எலைட்டின் விலை ரூ.50,000க்கும் குறைவாகத் ஆரம்பமாகும் . இது நிறுவனத்தின் தற்போதைய வரிசையில் விவோவின் X200T ஐ விட சற்று குறைவாக வைக்கிறது. நிலையான விவோ வி70 ரூ.40,000 க்கும் குறைவான பிரிவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது இந்தியாவில் பிரீமியம் மிட்-ரேஞ்ச் போன்களுக்கான முக்கிய விலை லிமிட்டாக உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo