உலகின் மிக பெரிய க்ரிப்டோகரன்ஷி Binance பாதுகாப்பு குறைபாடு ஏற்ப்பட்டுள்ளது

உலகின் மிக பெரிய க்ரிப்டோகரன்ஷி Binance பாதுகாப்பு குறைபாடு ஏற்ப்பட்டுள்ளது

உலகின் மிக பெரிய cryptocurrency பரிமாற்றம் நிறுவனமான (Binance) பாதுகாப்பு மீறல் அதாவது செக்யூரிட்டி ப்ரீச் ஏற்ப்பட்டுள்ளது சுமார் 6.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை இது பாதித்திருக்கக்கூடும், என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது இருப்பினும் நிதிகள் திருடப்பட்டதா என்பதை பற்றி குறிப்பிடவில்லை

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Binance கூறியது என்னவென்றால் இந்த பாதுகாப்பு குறைபாடுக்கு காரணம் லேப்டாப்

அந்த நிறுவனம் X தளத்தில் தொடர்ச்சியான பதிவுகள் மூலம் இந்த விவரங்களைப் பகிர்ந்துள்ளது. பைனான்ஸின் கூற்றுப்படி, அதன் ஆரம்பகட்ட விசாரணையில், ஒரு டெவொப்ஸ் பொறியாளருக்குச் சொந்தமான, ஊடுருவப்பட்ட மடிக்கணினி மூலம் இந்த மீறல் தொடங்கியிருக்கலாம் என்று தெரிகிறது. தாக்குதல் நடத்தியவர் இந்த அணுகலைப் பயன்படுத்தி ஒரு சேவை கண்டெய்னருக்குள் நுழைந்து, அங்கீகரிக்கப்படாத பணம் எடுக்கும் பரிவர்த்தனைகளைச் சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.

எந்தவொரு வாலட்டின் பிரைவேட் கீயும் கசிந்ததற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என பைனான்ஸ் தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்து, அனைத்து உண்மைகளும் சரிபார்க்கப்பட்டவுடன், ஒரு விரிவான தொழில்நுட்ப அறிக்கையை வெளியிடுவோம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

3 மில்லயன் டாலர் முடக்கம்

சுமார் 3 பில்லியன் டாலர் முடக்கப்பட்டுள்ளதை பைனான்ஸ் உறுதி செய்துள்ளது. பிளாக்செயின் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்துறை முழுவதுமான ஒருங்கிணைப்பு ஆகியவை திருடப்பட்ட நிதிகளின் பரிமாற்றத்தைத் தடுக்க உதவுகின்றன. எங்கள் புலனாய்வாளர்கள், நிதிகளை முடக்குவதற்கும் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் கூடுதல் வாய்ப்புகளைத் தீவிரமாகக் கண்டறிந்து வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆண்ட்ரோய்ட் போனின் விலையில் iPhone பேங்க் ஆபரின் கீழ் ரூ,5000 டிஸ்கவுண்ட்

SAFU பண்ட்ஸ் மற்றும் நிறுவனத்தின் பண்ட்ஸ் இழப்பையும் பைனான்ஸ் அணைத்துஈடு செய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பைனான்ஸ் பரிமாற்றம் பாதுகாப்பாக இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile