iQOO யின் புதிய போன் அடுத்த மாதம் அறிமுக ஆக தயார் லீக் தகவல் பாருங்க

iQOO யின் புதிய போன் அடுத்த மாதம் அறிமுக ஆக தயார் லீக் தகவல் பாருங்க

iQOO இப்போது அதன் ப்ளாக்ஷிப் iQOO 13 ஐ அறிமுகப்படுத்திய பிறகு ஒரு புதிய பட்ஜெட் பிரன்ட்லி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. லீக்கை நம்பினால், இந்த நிறுவனம் விரைவில் அதன் iQOO Neo 10R 5G ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம். இந்த வெளியீடு பற்றிய தகவலை நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஸ்மார்ட்போன் டெவலப்பிங்கில் இருப்பதாக அவர் தனது சோசியல் மீடியா X ட்விட்டர் பக்கத்தில் மூலம் விவரங்களை பகிர்ந்துள்ளார். இந்த போன் பற்றி இதுவரை நாம் அறிந்ததைப் பார்ப்போம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

iQOO Neo 10R பிப்ரவரி 2025 யில் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும், மிட் ரேன்ஜ் சந்தையில் கவனம் செலுத்தும் என்றும் வதந்திகள் வருகின்றன. இந்த ஸ்மார்ட்போன் iQOO Neo 10 சீரிசின் ஒரு பகுதியாக இருக்கும், இதில் ஏற்கனவே iQOO Neo 10 மற்றும் iQOO Neo 10 Pro ஆகியவை அடங்கும். iQOO Neo 10 ஏற்கனவே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, இப்போது Neo 10R இந்தியா உட்பட உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

iQOO Neo 10R எதிர்ப்பார்க்கப்படும் அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 144Hz ரெப்ராஸ் ரேட்டை வழங்கும். செயல்திறன் அடிப்படையில், இது Snapdragon 8s Gen 3 சிப்செட் பொருத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம்.

கேமராக்களுக்கு, 50 மெகாபிக்சல் Sony LYT-600 சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸை உள்ளடக்கிய இரட்டை கேமரா அமைப்பைக் காணலாம். செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டருடன் இந்த ஃபோன் வழங்கப்படலாம்.

பேட்டரியைப் பற்றி பேசுகையில், இது 6400mAh பேட்டரியுடன் நிரம்பியுள்ளது, இது 80W வேகமாக சார்ஜிங்கை ஆதரிக்கும். விலையைப் பொறுத்த வரையில், iQOO Neo 10R ஸ்மார்ட்போன் ரூ. 30000 விலைப் பிரிவில் கொண்டு வரப்படலாம், மேலும் இது Poco X7 Pro மற்றும் Redmi Note 14Pro+ போன்ற ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடலாம்.

இதையும் படிங்க: Samsung யின் புதிய போன் வந்த கையோட Samsung Galaxy S24 5G யில் அதிரடியாக ரூ,5000 டிஸ்கவுன்ட்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo