Flipkart Black Friday சேல் அறிவிச்சாச்சு ஸ்மார்ட்போன் வாங்கலாம் கம்மி விலையில்
Flipkart அதன் அடுத்த கட்ட விற்பனையை அறிவித்துள்ளது
ப்ரீமியம், மிட் ரேன்ஜ் மற்றும் பட்ஜெட் விலையில் இருக்கும் போனில் கிடைக்கும் ஆபர்
Flipkart Black Friday விற்பனை நவம்பர் 21 முதல் 27 வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
பாப்புலர் இ-காமர்ஸ் தளமான Flipkart அதன் அடுத்த கட்ட விற்பனையை அறிவித்துள்ளது. தற்பொழுது Flipkart Black Friday விற்பனை தேதி அறிவித்துள்ளது இந்த பிளிப்கர்டுக்கு பிறகு அமேசான் அதன் Black Friday தேதி அறிவிக்கும். இந்த விற்பனையின் கீழ் ப்ரீமியம், மிட் ரேன்ஜ் மற்றும் பட்ஜெட் விலையில் இருக்கும் போனில் கிடைக்கும் மிக சிறந்த ஆபர் சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படும் நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் ஆபர் விலையில் வாங்க நினைத்தால் இது உங்களுக்கு மிக சிறந்த வாய்ப்பாக இருக்கும் மேலும் இதன் முழு தகவல் பார்க்கலாம் வாங்க.
Flipkart Black Friday விற்பனை தேதி என்ன
Flipkart Black Friday விற்பனை நவம்பர் 21 முதல் 27 வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது இருப்பினும், இதில் எந்த எந்த பேங்கின் ஆபர் இருக்கும் என்பதை பற்றி குறிப்பிடவில்லை மேலும் இதில் Flipakart Axis கார்டு ஆபர் நன்மை வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கபடுகிறது இதை தவிர இதில் பழைய போனை டிவைஸ் எக்ஸ்சேஞ் ஆபர், நோ கோஸ்ட் EMI மற்றும் cardless EMI என்ற பல வசதி வழங்கப்படும்
எந்த எந்த போனில் கிடைக்கும் ஆபர்
ப்ரீமியம் ஸ்மார்ட்போன்
இந்த Flipkart Black Friday சேலில் ப்ரீமியம் ஸ்மார்ட்போனின் விற்பனையின் கீழ் Galaxy S25, iPhone 17, Galaxy S25 FE, Google Pixel 11 மற்றும் iPhone 15 போன்ற ஸ்மார்ட்போன்கள் அடங்கும். அதில் பிக்ஸல் 11 ஸ்மார்ட்போனை 73,999ரூபாய்க்கு வாங்கலாம். இதை இந்த போனை நோ கோஸ்ட் EMI கீழ் ரூ,6,166 செலுத்தி வாங்கலாம். Poco X8 pro Max ரூ,47,999 மற்றும் Motorola Edge 70 pro ரூ,36,999 க்கும் வாங்கலாம் இதை மாதந்திர EMI மூலம் ரூ,2,065க்கு வாகலாம்.
இதையும் படிங்க:ஒரே நேரத்தில் 5 பார்ட்டி ஸ்பீக்கர் அறிமுகம் செய்த Intex, இனி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கலில் கிடைக்கும் ஆபர்
ஃபிளிப்கார்ட் பிளாக் ஃபிரைடே விற்பனையின் போது, விவோ T5x 5G-ஐ ரூ. 25,499-க்கும், எட்ஜ் 70 ஃபியூஷனை ரூ. 32,999-க்கும், ஏஐ பிளஸ் நோவா 2 அல்ட்ரா 5G-ஐ ரூ. 20,999-க்கும், விவோ T5 5G-ஐ ரூ. 30,999-க்கும் மற்றும் நத்திங் ஃபோன் 4a-ஐ ரூ. 35,999-க்கும் வாங்கலாம்.
பட்ஜெட் ஸ்மார்ட்போன் லிஸ்ட்
பட்ஜெட் ஸ்மார்ட்போன் லிஸ்ட் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றிப் பேசுகையில், Ai+ Nova 2 5G-ஐ ரூ. 13,999-க்கும், Mivi One 5G-ஐ ரூ. 13,999-க்கும், Boltt Ace-ஐ ரூ. 13,999-க்கும் வாங்கலாம்.