Motorola பிரியர்களே உங்களுக்கு குட் நியூஸ் புது போனின் அறிமுக தேதி வெளியானது எப்போ பாருங்க

Motorola நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனான Motorola Edge 70 Neo, 2026 நவம்பர் 24 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிறுவனம் அதன் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. இந்த போன், எட்ஜ் 70 சீரிஸில் ஒரு புதிய தேர்வாக, நடுத்தர விலைப் பிரிவில் அறிமுகப்படுத்தப்படும். இதன் முக்கிய அம்சங்களில் 6.78-இன்ச் 1.5K pOLED டிஸ்ப்ளே, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 50MP சோனி லிடியா கேமரா ஆகியவை அடங்கும். இந்த போன், ஸ்னாப்டிராகன் 7s ஜென் 3 பிராசஸரால் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதில் 7,000mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இடம்பெறக்கூடும்.
Motorola Edge 70 Neo அறிமுக தகவல்.
மோட்டோரோலாவின் விளம்பர மைக்ரோசைட், அந்த ஃபோனின் டிசைன் மற்றும் சில சாப்ட்வேர் விவரங்களை வெளிப்படுத்தியுள்ளது. இதன் தோற்றம் மற்ற எட்ஜ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களைப் போலவே உள்ளது. இதில் கர்வத் பின்புற பேனல், வட்டமான எட்ஜ்கள் மற்றும் பின்புறத்தில் சதுர வடிவ கேமரா மாட்யூல் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் வலது பக்கத்தில் அமைந்துள்ளன. இந்த ஃபோன், மவுண்டன் வியூ, மில்கி ப்ளூ, சேஜ் மற்றும் கிரே லிலாக் ஆகிய நான்கு பேன்டோன் வண்ணத் தேர்வுகளில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Motorola Edge 70 Neo எதிர்ப்பர்க்கபடும் அம்சம்.
டிஸ்ப்ளேவைப் பொறுத்தவரை, இது 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் HDR10+ சப்போர்டுடன் கூடிய 6.78-இன்ச் 1.5K pOLED பேனலைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஹை ப்ரைட்னஸ் 5,200 நிட்ஸ் வரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i திரையைப் பாதுகாக்கும். செயல்திறனைப் பொறுத்தவரை, இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 3 பிராசஸரைக் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன் 6GB மற்றும் 8GB ரேம், அத்துடன் 128GB மற்றும் 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகைப்படக்கலைக்காக, எட்ஜ் 70 நியோவில் OIS மற்றும் அல்ட்ரா HDR சப்போர்டுடன் கூடிய 50MP சோனி LYTIA 710 ப்ரைமரி கேமரா இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனுடன் 2MP மேக்ரோ அல்லது டெப்த் சென்சார் மற்றும் 32MP முன்பக்க கேமராவும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஹலோ UX-ல் இயங்கும் மற்றும் மோட்டோ AI அம்சத்தைக் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பேட்டரி 7,000mAh திறன் கொண்டதாகவும், 45W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்வதாக கூறப்படுகிறது. இந்த போன் IP64 ரேட்டிங்கை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.
View full profile
