Digit.in

WhatsApp பயனர்களுக்கு சந்தோஷமான செய்தி 2GB Cloud Storage கிடைக்கும் Free மற்றும் சொந்த சர்வரில் சேமிக்கும்

Highlights

WhatsApp பயனர்களுக்கு ஒரு மிக பெரிய அப்டேட் கொண்டு வந்துள்ளது

இதில் Android பயனர்களுக்காக இலவசமாக புதிய Cloud Storage அம்சத்தை கொண்டு வந்துள்ளது.

தற்பொழுது இந்த அம்சம் WhatsApp Beta for Android யின் சில பயனர்களுக்கு மட்டும் கொண்டுவரப்பட்டது

WhatsApp பயனர்களுக்கு சந்தோஷமான செய்தி 2GB Cloud Storage கிடைக்கும் Free மற்றும் சொந்த சர்வரில் சேமிக்கும்

WhatsApp பயனர்களுக்கு ஒரு மிக பெரிய அப்டேட் கொண்டு வந்துள்ளது. நிறுவனம் இதில் Android பயனர்களுக்காக இலவசமாக புதிய Cloud Storage அம்சத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் WhatsApp சேட்டின் பேக்கப் நேரடியாக WhatsApp அதன் சர்வரில் ஸ்டோர் செய்யும், அதாவது பயனர்கள் இனி சேட் பெக்கப்புக்கு வெறும் Google Drive நம்பி இருக்க தேவை இல்லை. இருப்பினும் தற்பொழுது இந்த அம்சம் WhatsApp Beta for Android யின் சில பயனர்களுக்கு மட்டும் கொண்டுவரப்பட்டது மேலும் வரும் நாட்களில் இது அனைவருக்கும் கொண்டு வரப்படலாம்.

புதிய அம்சம் WhatsApp யின் Chat Backup செக்ஷனின் கீழ் Backup Provider என்பதை தேர்ந்து எடுக்கவும், இதன் கீழ் Google Storage அல்லது WhatsApp Cloud Storage யின் கீழ் எதாவது ஒன்றை தேர்ந்து எடுக்கலாம், மேலும் இதை பயனர்களின் தேவைகேற்ப இதை சுவிட்ச் செய்யலாம். இந்த அம்சம் WhatsApp Beta for Android யின் வெர்ஷனின் சில பயனர்களுக்கு தெரிகிறது. இருப்பினும் இந்த அம்சம் அணைத்து பீட்டா பயனர்களுக்கும் இந்த அம்சம் கிடைக்காது

WhatsApp பயனர்களுக்கு 2GB ஸ்டோரேஜ் கிடைக்கும் இலவசமாக

வாட்ஸ்அப் தனது கிளவுட் ஸ்டோரேஜ் மூலம் பயனர்களுக்கு 2ஜிபி இலவச சேமிப்பகத்தை வழங்குகிறது. இந்தச் சேமிப்பகத்தை வாட்ஸ்அப் உரையாடல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் மற்றும் பிற இணைப்புகளைப் பேக்கப் செய்யப் பயன்படுத்தலாம். வாட்ஸ்அப்பின் அதிகாரப்பூர்வ விதிமுறைகளின்படி, இந்த கிளவுட் ஸ்டோரேஜ் ஒரு விருப்பத் தேர்வாகும். பயனர்கள் விரும்பினால், கூகுள் டிரைவ் அல்லது ஐகிளவுட் போன்ற மூன்றாம் தரப்பு கிளவுட் ஸ்டோரேஜ் சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

இந்த அம்சத்தின் மிக முக்கியமான அம்சம் அதன் பாதுகாப்பு ஆகும். வாட்ஸ்அப்பின் சொந்த கிளவுட் ஸ்டோரேஜில் சேமிக்கப்படும் பேக்கப்களுக்கு எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் கட்டாயமாக்கப்படும். பயனர்கள் ஒரு பாஸ்கீயைப் பயன்படுத்தி தங்கள் பேக்கப்களைப் பாதுகாக்க முடியும். 64 இலக்க என்கிரிப்ஷன் கீயும் வழங்கப்படும். இதன் பொருள், வாட்ஸ்அப் அல்லது மெட்டாவால் கூட உங்கள் என்கிரிப்ட் செய்யப்பட்ட பேக்கப்பை நேரடியாக அணுக முடியாது. இருப்பினும், என்கிரிப்ஷன் கீ அல்லது பாஸ்கீயை தொலைத்துவிட்டால், பேக்கப்பை மீண்டும் அணுகுவது கடினமாகிவிடும்.

இந்த அம்சம் அனைவருக்கும் கிடைக்குமா?

தற்பொழுது இந்த அம்சம் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் அனைத்து Android பயனர்களுக்கு இப்போதைக்கு இல்லை, எனவே நீங்கள் இந்த WhatsApp யின் Backup Provider கீழ் WhatsApp Cloud Storage தெரியவில்லை என சிரம பட வேண்டாம், நிறுவனம் மெல்ல மெல்ல அனைவருக்கும் இந்த சேவையை கொண்டு வரும்.

Sakunthala

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile

Recommended Articles