கம்மி விலையில் அசத்தும் Jio வெறும் ரூ,123 யில் அன்லிமிடெட் காலிங், டேட்டா மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி
Reliance Jio, அதன் கஸ்டமர்களுக்கு மிகவும் குறைந்த விலை ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது
இந்த திட்டத்தின் கீழ் தினமும் 0.5GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் வழங்குகிறது
இருப்பினும், இந்தத் திட்டம் எல்லா கஸ்டமர்களுக்கும் ஏற்றதல்ல.

இந்தியாவின் முதல் டெலிகாம் நிறுவனமான Reliance Jio, அதன் கஸ்டமர்களுக்கு மிகவும் குறைந்த விலை ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தினமும் 0.5GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் நன்மை வழங்கப்படுகிறது இந்த திட்டத்தின் விலை ரூ,123 ஆகும் மேலும் இது ஜியோவின் மிக குறைந்த விலை திட்டமாகும் இந்த திட்டத்தின் முழு நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Jio ரூ,123 ப்ரீபெய்ட் திட்டம்.
நாம் பேசிக்கொண்டிருக்கும் ப்ரீபெய்ட் திட்டம் , ஜியோவின் ரூ.123 ப்ரீபெய்ட் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் சேவைக் காலம் 28 நாட்கள் ஆகும். இதனால், ஒரு நாளுக்கான கட்டணம் ரூ.4.39 ஆகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலம் பயனர்களுக்கு தினசரி 0.5GB டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் காலிங் மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கின்றன. இந்தத் திட்டத்தின் எஸ்எம்எஸ் பலன்கள் மாதம் முழுவதும் வரையறுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்தத் திட்டம் எல்லா கஸ்டமர்களுக்கும் ஏற்றதல்ல.
இந்த திட்டம் யாருக்கு பயன்படும்?
இந்த திட்டம் அனைவருக்கும் கிடைக்காது ஜியோபோன் வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்ய முடியும். ஜியோபோன்கள் சிம் லாக் செய்யப்பட்டவை, மேலும் அந்தச் சாதனத்தின் பயனர்கள் ரூ.123 திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்யலாம். ரூ.123 திட்டம் என்பது நுகர்வோருக்கான தொடக்க நிலைத் தேர்வாகும். வழக்கமான பலன்களைத் தவிர, பயனர்கள் ஜியோசாவன் மற்றும் ஜியோடிவிக்கான அக்சஸ் பெறலாம்.
இந்தச் சப்ஸ்க்ரிப்ஷன் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. ஜியோபோன் பயனர்கள் யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம், தங்கள் போனிலே நேரடியாக லைவ் டிவியைப் பார்க்கலாம். இவை பரந்த மக்களுக்கு 4ஜி அக்சஸ் வழங்குவதற்காக ஜியோவால் வடிவமைக்கப்பட்ட பழைய பாணி கீபேட் டிவைஸ்ஆகும். எனவே, குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் இந்தத் திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்யலாம்.
Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.
View full profile
