MacBook Air (2025) இந்தியாவில் அறிமுகம் இதன் விலை மற்றும் அம்சங்கள் எப்படி இருக்கும் பாருங்க
Apple புதன்கிழமை அதன் என்ட்ரி லெவல் லேப்டாப் MacBook Air (2025) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது இந்த லேப்டாப் நிறுவனத்தின் 10கோர் சிப்செட் M4 உடன் வருகிறது, இந்த புதிய லேப்ட்டப்பை நிறுவனம் 13 இன்ச் டிஸ்ப்ளே உடன் அறிமுகம் செய்துள்ளது இதை தவிர இந்த லேப்டாப் Apple Intelligence சப்போர்ட் வழங்குகிறது மேலும் இதன் விலை மற்றும் அம்சங்களை பற்றி பார்க்கலாம்.
SurveyMacBook Air (2025) இந்திய விலை மற்றும் விற்பனை
16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் கூடிய அடிப்படை மாடலின் மேக்புக் ஏர் (2025) இந்தியாவில் ரூ .99,900 விலையில் உள்ளது. அதே நேரத்தில், 15 அங்குல மாடலை அதே கட்டமைப்பில் ரூ.1,24,900க்கு வாங்கலாம். மேக்புக் ஏர் (2025)க்கான ப்ரீ ஆர்டர்கள் தொடங்கியுள்ளன. இதன் விற்பனை மார்ச் 12 முதல் தொடங்கும். வண்ண விருப்பங்களில் மிட்நைட், சில்வர், ஸ்கை ப்ளூ மற்றும் ஸ்டார்லைட் நிழல்கள் அடங்கும்.

MacBook Air (2025) சிறப்பம்சங்கள்.
மேக்புக் ஏர் (2025) இரண்டு டிஸ்ப்ளே சைஸ்களில் வருகிறது – 13-இன்ச் (2,560×1,664 பிக்சல்கள்) மற்றும் 15-இன்ச் (2,880×1,864 பிக்சல்கள்) டிஸ்ப்ளே வேரியன்ட் கொண்டுள்ளது. இவை சூப்பர் ரெடினா டிஸ்ப்ளேவுடன் பொருத்தப்பட்டுள்ளன. பிக்சல் டென்சிட்டி 224ppi ஆகவும், ஹை ப்ரைட்னாஸ் 500nits ஆகவும் உள்ளது. மேக்புக் ஏர் (2025) M4 சிப்பைக் கொண்டுள்ளது. இது நான்கு பர்போமான்ஸ் கோர்களை உள்ளடக்கிய 10-கோர் CPU ஆகும், மேலும் நான்கு பர்போமான்ஸ் கோர்களும் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளன. இது 16-கோர் நியூரல் எஞ்சின் மற்றும் 8-கோர் GPU ஐக் கொண்டுள்ளது.
மேக்புக் ஏர் (2025) 24 ஜிபி வரை ரேம் மற்றும் 2 டிபி வரை SSD ஸ்டோரேஜ் விருப்பத்தைக் கொண்டுள்ளது. இது ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் 3-மைக் வரிசைக்கான சப்போர்டுடன் குவாட் ஸ்பீக்கர் அமைப்பைக் கொண்டுள்ளது. கனேக்சனுக்ககாக , இந்த லேப்டாப்பில் Wi-Fi 6E மற்றும் புளூடூத் 5.3 க்கான சப்போர்டை கொண்டுள்ளது. இது தவிர, இரண்டு தண்டர்போல்ட் 4 / USB 4 போர்ட்கள், ஒரு MagSafe 3 சார்ஜிங் போர்ட் மற்றும் ஒரு 3.5mm ஆடியோ ஜாக் வழங்கப்பட்டுள்ளன.
மேக்புக் ஏர் (2025) லேப்டாப்பை திறக்கப் பயன்படுத்தக்கூடிய டச் ஐடி பட்டனை கொண்டுள்ளது. இது ஃபோர்ஸ் கிளிக் மற்றும் மல்டி-டச் சைகை சப்போர்டுடன் கூடிய ஃபோர்ஸ் டச் டிராக்பேடைக் கொண்டுள்ளது. இது தவிர, இது சென்டர் ஸ்டேஜ் மற்றும் டெஸ்க் வியூவை ஆதரிக்கும் 1080p ஃபேஸ்டைம் கேமராவுடன் வருகிறது.
13 இன்ச் மேக்புக் ஏர் 53.8Wh லித்தியம் பாலிமர் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 70W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது . 15-இன்ச் வேரியண்டில் 66.5Wh பேட்டரி உள்ளது, இது சற்று பெரியது. இந்த லேப்டாப் வெப் ப்ரவுசிங்க்க்கு 15 மணிநேர பேக்கப் , ஆப்பிள் டிவி வழியாக வீடியோ பிளேபேக்கிற்கு 18 மணிநேரத்தையும் வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது.
இதையும் படிங்க:Vivo யின் இந்த புதிய போன் MediaTek Dimensity 7300 உடன் அறிமுகம் மேலும் டாப் அம்சம் மற்றும் விலை பாருங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile