Infinix இந்தியாவில் அறிமுகம் செய்தது மெல்லிய லேப்டாப் மற்றும் மெல்லிய ஸ்மார்ட்டிவி

HIGHLIGHTS

Infinix இந்தியா முழுவதுமாக அதன் வணிகத்தை படிப்படியாக அதிகரித்து வருகிறது

Infinix இந்தியாவில் இன்று அதாவது அக்டோபர் 12, 2022 அன்று புதிய லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது

nfinix இன் இந்த இரண்டு ப்ரோடக்ட்களைப் பற்றி உங்களுக்குச் சொல்வோம்.

Infinix இந்தியாவில் அறிமுகம் செய்தது மெல்லிய லேப்டாப் மற்றும் மெல்லிய ஸ்மார்ட்டிவி

Infinix இந்தியா முழுவதுமாக அதன் வணிகத்தை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் விஷயத்தில் இன்பினிக்ஸ் நிறைய பெயரைப் பெற்றுள்ளது இப்போது அது மற்ற ப்ரோடக்ட்ஸ்களிலும் தனது முயற்சி செய்கிறது.Infinix இந்தியாவில் இன்று அதாவது அக்டோபர் 12, 2022 அன்று புதிய லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது. Infinix இன் இந்த இரண்டு ப்ரோடக்ட்களைப் பற்றி உங்களுக்குச் சொல்வோம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Infinix INBook X2 Plus

Infinix இன் புதிய லேப்டாப்பின் பெயர் Infinix INBook X2 Plus. இது மிகவும் லேசான லேப்டாப். இது 15.6-இன்ச் முழு HD ஸ்கிரீனை கொண்டுள்ளது, இது 1920 x 1080 பிக்சல்கள் ரெசொலூஷன் மற்றும் 300 nits பிரைட்னஸ் உடன் வருகிறது. 8GB ரேம் மற்றும் 256GB NVMe PCIe 3.0 SSD ஸ்டோரேஜ் உடன் வரும் இந்த லேப்டாப்பில் ப்ரோசிஸோர் Intel Core i3 11th Gen சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்பில் கோர் ஐ7 வேரியண்ட் கிடைக்கிறது. இந்த இரண்டு மாடல் லேப்டப்களிலும் Iris Xe கிராபிக்ஸ் கிடைக்கிறது.

Infinix இன் இந்த புதிய லேப்டாப் Windows 11 Home இல் வேலை செய்கிறது. இது 50Wh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 65W பாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது. இதில் சார்ஜ் செய்ய டைப்-சி போர்ட் உள்ளது. இந்த லேப்டாப்பின் பேட்டரி 9 முதல் 10 மணி நேரம் பேட்டரி பேக்அப்பை தருவதாக கம்பெனி கூறுகிறது. இந்த லேப்டாப்பில் அலுமினியம் அலாய் மெட்டல் பாடி உள்ளது இதன் முன் 1080P முழு HD கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த லேப்டப் 1 x HDMI 1.4 போர்ட், 2 x USB 3.0 போர்ட், 2 x USB-C போர்ட், 1 x SD கார்டு ஸ்லாட் மற்றும் 1 x 3.5 mm ஹெட்செட் – மைக்ரோபோன் ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. Infinix INBook X2 Plus இன் விலை 32,990 ரூபாயில் தொடங்குகிறது. இந்த லேப்டாப் அக்டோபர் 18 முதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது. இது மிகவும் லேசான மற்றும் மெல்லிய லேப்டாப் என்று கம்பெனி கூறுகிறது.

 Infinix 43Y1 Smart TV

இந்த டிவியின் போட்டோவை பார்த்தாலே கண்டிப்பாக வாங்க ஆசை வரும். கம்பெனி இந்த ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் வெறும் 13,999 ரூபாய்க்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த டிவியில் 43 இன்ச் FHD டிஸ்ப்ளே உள்ளது, இதன் பிரைட்னஸ் 300 நைட்ஸ் ஆகும். இது முன்பே ஏற்றப்பட்ட பயன்பாடுகள் மற்றும் 20W ஸ்பீக்கர் வெளியீட்டைக் கொண்டுள்ளது, இது Dolby Audio வுடன் பொருத்தப்பட்டுள்ளது.

Infinix இன் இந்த ஸ்மார்ட் டிவியில், பிரைம் வீடியோ, யூடியூப், ஜி5, சோனி லிவ் உள்ளிட்ட பல ஆப்ஸின் சப்போர்ட்  யூசர்கள் பெறுகின்றனர். டிவியின் டிசைன் பிளாட் மற்றும் பெசல் மட்டுமல்ல. இந்த டிவியின் படத்தை பார்த்ததும் இது பெசல் லெஸ் ஸ்மார்ட் டிவி என்று தெரிகிறது. இந்த டிவி Flipkart இல் விற்கப்படும், ஆனால் கம்பெனி அதன் விற்பனை தேதியை இன்னும் அறிவிக்கவில்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile