TrueCaller பயன்படுத்தும் பயனர்களே ஜாக்கிரதையா இருங்க.

TrueCaller  பயன்படுத்தும் பயனர்களே  ஜாக்கிரதையா இருங்க.

மொபைல் நம்பரை ட்ரேஸ் செய்யும் பிரபல 'ட்ரூ காலர்' ஆப்பில் பக் இருப்பது தெரியவந்துள்ளது. ஸ்வீடன் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு ‘ட்ரு காலர்’ ஆப் செயல்பட்டு வருகிறது. மொபைல் நம்பர் யாருடையது, எங்கிருந்து பேசுகிறார்கள் என்பது பற்றிய தகவல்களை வழங்குவதால், இளைஞர்கள் மத்தியில் ட்ரு காலர் மிகவும் பிரபலமடைந்துள்ளது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த நிலையில், தற்போது ட்ரூ காலிரில் பாதுகாப்பு குறைபாடு ‘பக்’ இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. அதாவது ட்ரூ காலரின் லேட்டஸ்ட் வெர்ஷன் 10.41.6 இல், பயனாளர்களின் அனுமதியே இல்லாமல், அவர்களுடைய பெயரில் ICICI பேங்க் அக்கவுண்ட் உருவாக்கப்படுகிறது. 

மேலும், பேங்க் அக்கவுண்ட் தொடங்கப்பட்டது குறித்து பயனாளர்களுக்கு SMS அனுப்பப்படுகிறது. அதில், ‘வாழ்த்துக்கள் உங்களுக்கு புதிதாக யுபிஐ வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. உங்களுடைய வங்கி விபரங்கள், பாஸ்வேர்டுகளை யாரிடமும் கூறாதீர்கள். இது நீங்கள் இல்லை என்றால் உடனே வங்கியை தொடர்பு கொண்டு தெரிவியுங்கள்’ இவ்வாறு SMS வருகிறது. 

இந்த விவகாரம் தொடர்பாக ட்ரூ காலரிடம் சில பயனாளர்கள் அளித்த புகாரில், பக் விரைவில் சரி செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பக் இல்லாத புதிய வெர்ஷன் அப்டேட் செய்யப்படும் என்றும் பயனாளர்கள் அதை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதனால் ட்ரூ காலர் பயனாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். பலர் தங்களது ட்ரூ காலரை அன்இன்ஸ்டால் செய்து வருகின்றனர். மேலும், ICICI வங்கி தரப்பில் இருந்து இது பற்றி எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை. ட்ரூ காலரில் இருக்கும் பக்கை பயன்படுத்தி தான் மர்ம நபர்கள் இது  செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. 

என்னதான் ட்ரு காலர் நிறுவனம் அது பக் இனி அவ்வாறு செய்யாது என கூரினாலும் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பது உண்மை தான் அதுமட்டுமல்லாமல் நமது SMS டேட்டாவை விற்பனை செய்யப்படுவது  என்பதும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவே  மக்கள் இனி அந்த ஆப் பய பயன்படுத்தாமல்  இருப்பது நல்லது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo