பல லட்சம் மக்களின் பாஸ்வர்ட் இவ்வளவு ஈஸியா ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

பல லட்சம்  மக்களின்  பாஸ்வர்ட்  இவ்வளவு ஈஸியா  ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
HIGHLIGHTS

லண்டன் தேசிய சைபர் செக்யூரிட்டி மையம் (NCSC) நடத்திய சமீபத்திய ஆய்வில் பல லட்சம் பேர் பயன்படுத்தும் பொதுவான ஒற்றை பாஸ்வேர்டு “123456” தான் என கண்டறியப்பட்டுள்ளது.

லண்டன் தேசிய சைபர் செக்யூரிட்டி மையம் (NCSC) நடத்திய சமீபத்திய ஆய்வில் பல லட்சம் பேர் பயன்படுத்தும் பொதுவான ஒற்றை பாஸ்வேர்டு “123456” தான் என கண்டறியப்பட்டுள்ளது.

பொது வெளியில் இருந்து கசிந்த அக்கவுண்ட்களின் விவரங்களை ஆய்வுக்கு உட்படுத்திய NCSC பொது மக்கள் அதிகம் பயன்படுத்திய எழுத்துக்கள், வார்த்தைகள் உள்ளிட்டவற்றை பார்த்தனர். இதில் “123456" என்ற பாஸ்வேர்டை மட்டும் சுமார் 2.3 கோடி பேர் பயன்படுத்தியிருக்கின்றனர். 

இதற்கு அடுத்த இடத்தில் “123456789” இருந்தது. இவைதவிர “qwerty”, “password” மற்றும் “1111111” உள்ளிட்டவை அதிகம் பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்டுகளின் முதல் ஐந்து இடங்களில் இருக்கின்றன. 

பாஸ்வேர்டுகளில் பிரபல பெயர்கள் அல்லது எழுத்துக்களை பயன்படுத்துவோர் மிக எளிதில் ஹேக்கர் வசம் சிக்கிவிட முடியும் என NCSC தொழில்நுட்ப இயக்குனர் இயான் லெவி தெரிவித்தார். முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை பாதுகாக்க நினைப்போர் எளிதில் கணிக்கக்கூடிய பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இவற்றுடன் பாஸ்வேர்டுகளில் அதிகம் பயன்படுத்தும் பெயர்களில் ஆஷ்லி, மைக்கேல், டேனியல், ஜெசிகா மற்றும் சார்லி உள்ளிட்டவையும், கால்பந்து அணிகளின் பெயர்களான லிவர்பூல், செல்சி உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கின்றன. பொதுவான பாலஸ்வேர்டுகளை சூட்டுபவர்களில் பலர் ப்ளின்க் 182 (Blink-182) என்ற பாஸ்வேர்டையும் பயன்படுத்தியிருக்கின்றனர்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo