இந்தியாவில் இனி ரயில் நிலையங்களில் செல்பி எடுத்தால் 2000 ரூபாய் அபராதம் ..!
இந்தியாவில் இனி ரயில் நிலையங்களில் செல்பி எடுத்தால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே வாரியம் புதிய அறிவிப்பை வெளியிட்டது.
இந்தியாவில் இனி ரயில் நிலையங்களில் செல்பி எடுத்தால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே வாரியம் புதிய அறிவிப்பை வெளியிட்டது. செல்பி புகைப்படம் எடுப்பது தனிபட்டவரின் உரிமை என்றாலும் மற்றவர்களுக்கு இடையூராக இருந்தால் குற்றம் குற்றம் தானே.
Surveyஇந்தியாவில் மட்டும் செல்பி எடுத்து உயிரை இழந்தவர்கள் பட்டியலில் இந்தியாவிற்க்கு முதலிடம், ஸ்மார்ட்போன்கள் வந்ததுதான் வந்தது உயிரிழப்புகள் ஏறலாம், என்னதான் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் வந்தது டெக்னோலஜி வளர்ப்பு என்றாலும், இதில் நன்மை 30% சதவீதம் என்றால் தீமை 70% ஆக இருக்கிறது.
ஸ்மார்ட்போனில் செல்பி எடுக்கும் பெயரால் ரயில் அருகில் நின்று செல்பி எடுப்பது, மேலும் ரயில் நிலையங்களில் ரயில் வரும்பொழுது செல்பி எடுப்பது என பலர் தங்களின் உயிரை இழந்து வருகிறார்கள் மேலும் இறந்தவர்களில் பலர் இளம் வயதினர் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ரயில் தண்டவாளம், உயரமான மலை நீர் வீழ்ச்சி போன்ற ஆபத்தான இடங்களில் செல்பி எடுத்து சிலர் இறந்துள்ளனர். அப்படி இறந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. புகைபடம் எடுப்பது ஒரு நினைவாக இருக்க வேண்டுமே தவிர அவரின் புகை ஓவியங்களாக அமைந்துவிட கூடாது.
எந்த நேரமும் சிலர் செல்பி எடுப்பதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள், அந்த வகையில் ஆராய்ச்சி நிபுணரிடம் கேட்ட பொழுது, செல்பி எடுக்கும் போது அதில் வெளியாகும் நீல நிற ஒளி, தோல் நலனையும், வெளியாகும் எலக்ட்ரோ மெக்னடிக் கதிர்கள், மரபணுவை பாதிக்கும். செல்பி பழக்கம் ஒரு வித மனோ வியாதி என ஆய்வாளர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்
ஒரு லைக் மற்றும் கமண்ட்க்கு ஆசைப்பட்டு உயிரை விட்டவர்கள் என்ற பட்டியலில் இந்தியாவிற்க்கு தான் முதலிடம். சாதிக்க எவ்வளோவோ விஷயம் இருக்கும்பொழுது செல்பி எடுக்கும்போது உயிரை விட்டார்கள் என்பது சாதனை அல்ல அது கோலை தனமே
பாதுகாப்பான இடத்தில், பாதுகாப்பான சூழலில் செல்பி எடுப்பது தவறில்லை. சாதிக்க நிறைய விஷயங்கள் இருக்கும் போது, அற்ப சந்தோஷத்துக்காக ஆட்படுத்திக் கொள்ள வேண்டுமா என்ன…? வளர்ந்து வரும் நவீன காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் உபயோகிக்கும் முறை அதிகரித்து விட்டதால், வெற்றியோ.? தோல்வியோ.? நல்லதோ.? கெட்டதோ.? வாழ்வில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் செல்பி எடுக்கும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் பெருகி வருகிறது. செல்பி எடுக்கலாம் அது அளவுடன் இருக்கவேண்டும் அதற்க்காக அடிமையோ அல்லது அதற்க்கு உயிரையே விடக்கூடாது
Sakunthala
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile



