10,050mAh பேட்டரியுடன் OnePlus Pad Go 2 அறிமுகம் இதன் விலை மற்றும் அம்சங்கள் பார்த்து தெருஞ்சிகொங்க

10,050mAh பேட்டரியுடன் OnePlus Pad Go 2 அறிமுகம் இதன் விலை மற்றும் அம்சங்கள் பார்த்து தெருஞ்சிகொங்க

OnePlus அடுத்த ஜெனரேஷன் டேப்லெட்டையும் OnePlus Pad Go 2அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டிவாஸ் , மிக சிறந்த டிஸ்ப்ளே , பர்போமான்ஸ் , பேட்டரி மற்றும் கேமரா ஆகியவற்றில் அப்டேட்களுடன் ஒரு பேப்பர் விட மிக சிறந்த நோட்ஸ் எடுக்க முடியும் மேலும் இது ஸ்டைலஸ் சப்போர்ட் வழங்கப்படுகிறது மேலும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

OnePlus Pad Go 2 சிறப்பம்சம்.

OnePlus Pad Go 12.1-இன்ச் LCD டிஸ்ப்ளேவுடன் 7:5 paper on paper 120Hz ரெப்ரஸ் ரேட்டுடன் கொண்டது. இது 900 nits வரை ஹை ப்ரைட்னஸ் வழங்குகிறது மற்றும் 12-பிட் கலர் ஆழத்தையும் 98 சதவீத DCI-P3 கலர் லிமிட் கவரேஜையும் சப்போர்ட் செய்கிறது. இந்த பேடில் MediaTek Dimensity 7300-Ultra சிப்செட்டுடன் நிரம்பியுள்ளது, 8GB LPDDR5X RAM மற்றும் UFS 3.1 ஐப் பயன்படுத்தி 128GB அல்லது 256GB ஸ்டோரேஜ் விருப்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

OnePlus Pad Go 2 ஒரு பெரிய 10,050mAh பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் USB Type-C போர்ட் வழியாக 33W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது . இது OxygenOS 16 ஐ இயக்குகிறது, பெரிய ஸ்க்ரீன்கள் மற்றும் பல்பணிகளுக்கு ஏற்ற சாப்ட்வேர் அனுபவத்தை வழங்குகிறது.

இதையும் படிங்க கேமர்களுக்கு ஈர்க்கும் வகையில் Oneplus 15R அறிமுகம் 7400 பேட்டரி பேட்டரி 80W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங்

கேமராக்களைப் பொறுத்தவரை, டேப்லெட்டில் 8MP பின்புற கேமரா மற்றும் 8MP முன் செல்பி கேமரா உள்ளன, இது அடிப்படை புகைப்படத் தேவைகள், வீடியோ கால்கள் மற்றும் ஆன்லைன் சந்திப்புகளைப் பூர்த்தி செய்கிறது.

கூடுதல் அம்சங்களில் ஆடியோ அவுட்புட்டுக்கு குவாட் ஸ்பீக்கர்கள், பல ஆடியோ கோடெக்குகளுடன் புளூடூத் 5.4 க்கான சப்போர்ட் , Wi-Fi 6 கனெக்ஷன் மற்றும் ஷேடோ பிளாக் வேரியண்டின் விருப்பத்தேர்வு 5G செல்லுலார் ஆதரவு ஆகியவை அடங்கும். டேப்லெட் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான பேஸ் அன்லாக்கையும் வழங்குகிறது மற்றும் ஷேடோ பிளாக் மற்றும் லாவெண்டர் டிரிஃப்ட் கலர் விருப்பங்களில் வருகிறது.

OnePlus Pad Go 2 விலை தகவல்

OnePlus Pad Go 2 இன் அடிப்படை வேரியன்ட் 8GB RAM மற்றும் 128GB வேரியன்ட் (WiFi) உடன் வருகிறது. இதன் விலை ₹26,999. இரண்டாவது வேரியன்ட் 8GB RAM மற்றும் 256GB வேரியன்ட் (WiFi) வழங்குகிறது மற்றும் இதன் விலை ₹29,999. 8GB RAM மற்றும் 256GB 5G சப்போர்டுடன் கூடிய சிறந்த மாடலின் விலை ₹32,999.

இருப்பினும், வங்கி சலுகைகளுடன், அனைத்து மாடல்களும் ₹3,000 தள்ளுபடியைப் பெறுகின்றன. இந்த டேப்லெட் டிசம்பர் 18 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும். குறிப்பிட்ட காலத்திற்கு, ₹3,999 விலையில் உள்ள OnePlus Pad Go 2 Style இலவசமாக வழங்கப்படுகிறது. இது Shadow Black மற்றும் Lavender Drift கலர்களில் கிடைக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo