இனி Windows 10க்கு நோ சப்போர்ட் புதிய Windows 11 யில் அப்டேட் செய்வது எப்படி?
செவ்வாய்க்கிழமை முதல், மைக்ரோசாப்ட் Windows 10-க்கு ஸ்டேண்டர்ட் இலவச சப்போர்ட் வழங்குவதை நிறுத்திவிடும், இது உலகளவில் மில்லியன் கணக்கான கம்ப்யூட்டர் இன்னும் பயன்படுத்தப்படும் ஒப்பரேட்டிங் சிஸ்டம் ஆகும். 2021 யில் விண்டோஸ் 11 அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், செப்டம்பர் புள்ளிவிவரங்கள் சுமார் 40 சதவீத விண்டோஸ் பயனர்கள் தொடர்ந்து விண்டோஸ் 10 ஐ இயக்குவதாகக் கூறுகின்றன.அக்டோபர் 14, 2025க்குப் பிறகு, விண்டோஸ் 10 இலவச சாப்ட்வேர் அப்டேட்கள் , செக்யூரிட்டி கனெக்ஷன் அல்லது தொழில்நுட்ப உதவி போன்றவை கிடைக்காது . ஆனால் டிவைஸ் தொடர்ந்து செயல்படும் அதே வேளையில், தொடர்ச்சியான சப்போர்ட் இல்லாததால் அவை வைரஸ்கள், மேல்வேர் மற்றும் பிற சைபர் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்.
Surveyசைபர் தாக்குதல் நடைபெறலாம்.
மைக்ரோசாப்ட் அதன் புதிய அமைப்பான விண்டோஸ் 11, “இயல்பாகவே அதிகரித்த பாதுகாப்பிற்கான தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்கிறது” என்று எடுத்துரைத்துள்ளது.விண்டோஸ் 10-ல் தொடர்ந்து இயங்குவது பயனர்களை ஹேக்கர்களுக்கு முக்கிய இலக்காக மாற்றக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் என்பதை இந்த வெளியீடு எடுத்துக்காட்டுகிறது
இதையும் படிங்க தரமான சரவெடி ஆபர் கம்மி விலையில் அல்லுங்க Amazon இந்த போன்களில் பக்கவான டிஸ்கவுண்ட்
பழைய Windows 10 லிருந்து Windows 11க்கு எப்படி அப்க்ரேட் செய்வது
பயனர்கள் தங்கள் டிவைஸ் விண்டோஸ் 11க்கு பல வழிகளில் அப்டேட் செய்யலாம் . மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து விண்டோஸ் அப்டேட் அறிவிப்பைப் வழங்கும் வரை காத்திருக்குமாறு பயனர்களுக்கு மைக்ரோசாப்ட் அறிவுறுத்துகிறது. இருப்பினும், பயனர்கள் விரும்பினால் தங்கள் டிவைஸ் அப்டேட் செய்யலாம். இங்கே, படிப்படியான செயல்முறை மூலம் நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுவோம்.
- முதலில், உங்கள் சாதனத்தில், Start > Settings > Update & Security > Windows Update என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- மாற்றாக, நீங்கள் Windows Update பதிலாக ஷோர்ட்கட் தட்டவும் அதன் பிறகு Check for updates பட்டனை கிளிக் செய்யவும்.
- (தற்போதைய விண்டோஸ் அப்டேட்டிர்க்கன் அப்டேட் கிடைத்தால், பயனர்கள் முதலில் அதற்கான அப்டேட் இன்ஸ்டால் செய்ய வேண்டியிருக்கும் இங்கே நினைவில் கொள்க. உதரனமாக் , விண்டோஸ் 10 க்கு ஒரு புதிய ஃபார்ம்வேர் அப்டேட் கிடைத்தால், பயனர்கள் விண்டோஸ் 11க்கு அப்டேட் செய்வதற்க்கு முன்பு அதை இன்ஸ்டால் செய்ய வேண்டியிருக்கும். அதன் பிறகு, அவர்கள் ஒப்பரேட்டிங் சிஸ்டம் மீண்டும் தொடங்க வேண்டும்.
- டிவைஸ் தயாரானதும், விண்டோஸ் 11 இன்ச்டலேஷனுக்கு தயாராகிவிடும்.
- செயல்முறையைத் தொடங்க Download and install பட்டனை கிளிக் செய்யவும்.
- அடுத்து, பயனர் Software Licence Term என்ற தலைப்பில் ஒரு அறிவிப்பைக் காண்பார். இங்கே Accept என்பதைக் கிளிக் செய்து, பின்னர் install என்பதைக் கிளிக் செய்யவும்.
- விண்டோஸ் அப்டேட் பக்கம் தானாகவே அப்டேட் செய்யப்படும். பயனர் ஸ்க்ரீனில் விண்டோஸ் 11 அப்டேட் செயல்முறையைப் பார்ப்பார்.
- விண்டோஸ் 11 டவுன்லோட் முடிந்ததும், பயனர் தனது டிவைசை ரீஸ்டோர் செய்ய வேண்டும், அதற்காக அவர் இப்போது Restart Now பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
- விண்டோஸ் 11 install செயல்முறை முடிவதற்கு முன்பு உங்கள் டிவைஸ் பல முறை ரீஸ்டார்ட் செய்யப்படலாம்.
- உங்கள் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் தானாகவே ரீஸ்டார்ட் ஆகும் . செயல்முறை முடிந்ததும், பயனர்கள் டிவைஸ் லாகின் செய்து வழக்கம் போல் அதைப் பயன்படுத்தலாம்.
Installation Assistant மூலம் window11 அப்டேட் செய்வது எப்படி
விண்டோஸ் 11 ஐ இன்ஸ்டால் செய்ய நீங்கள் Installation Assistant என்ற பயன்பாட்டையும் பயன்படுத்தலாம், அதன் முறையை நாங்கள் இங்கே விளக்குகிறோம்.
முதலில், டிவைசை Windows 11 Installation Assistant இயக்கவும்.
இப்போது install விண்டோஸ் 11 என்பதைத் தட்டவும்.
இதற்குப் பிறகு Accept and install என்பதைக் கிளிக் செய்தால் செயல்முறை தானாகவே தொடங்கும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile