7000mAh பேட்டரி மற்றும் 11 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட itel யின் புதிய டேப் அறிமுகம்

HIGHLIGHTS

itel இந்தியாவில் தனது புதிய டேப்லெட்டான Vista Tab 30 அறிமுகப்படுத்தியுள்ளது

இந்த Vista Tab 30 மிக சிறந்த இரட்டை கனேக்ஷனுடன் வருகிறது

இது 11 இன்ச் FHD டிஸ்ப்ளே, 128GB ஸ்டோரேஜ் மற்றும் 7000mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது

7000mAh பேட்டரி மற்றும் 11 இன்ச் டிஸ்ப்ளே  கொண்ட itel யின் புதிய டேப் அறிமுகம்

itel இந்தியாவில் தனது புதிய டேப்லெட்டான Vista Tab 30 அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டேப்லெட் மாணவர்கள்,பிஸ்னஸ் மற்றும் பல வேலைகளுக்கு இந்த Vista Tab 30 மிக சிறந்த இரட்டை கனேக்ஷனுடன் வருகிறது, அதாவது, செல்லுலார் + வைஃபை சப்போர்ட் ,இது 11 இன்ச் FHD டிஸ்ப்ளே, 128GB ஸ்டோரேஜ் மற்றும் 7000mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது மேலும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க..

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vista Tab 30 விலை தகவல்

Vista Tab 30 இந்தியாவில் ரூ,11,999 ஆகும் இதை Space Grey மற்றும் Sky Blue கலரில் வாங்கலாம்.நிறுவனம் ₹1,999 மதிப்புள்ள இலவச தோல் பின் அட்டையையும் வழங்குகிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த அம்சம் பொதுவாக ₹15,000 க்கும் குறைவான டேப்லெட் பிரிவில் கிடைக்காது.

itel Vista Tab 30 சிறப்பம்சம்.

ஐடெல் விஸ்டா டேப் 30, தினசரி பயன்பாட்டிற்காகவும் மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 8மிமீ மெலிதான மெட்டாலிக் பாடி கொண்டுள்ளது. இது 1900 x 1200 பிக்சல்கள் ரெசளுசன் மற்றும் 450 நிட்ஸ் ஹை ப்ரைட்னாஸ் 11-இன்ச் FHD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது ஆடியோவிற்கான குவாட் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. டேப்லெட் 7000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 10W சார்ஜருடன் வருகிறது. கேமரா துறையில் 8MP பின்புற கேமரா மற்றும் 5MP முன் கேமரா ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க 200MP கேமரா கொண்ட Samsung யின் இந்த ஸ்டைலிஷ் போனில் அதிரடியாக ரூ,11000 பேங்க் ஆபர்

பர்போமன்சுக்காக , ஐடெல் இந்த டிவைச்ல் யூனிசாக் T606 ஆக்டா-கோர் ப்ரோசெசர் இயக்கப்படுகிறது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி வெர்சுவல் ரேம் மூலம் சப்போர்ட் செய்யப்படுகிறது , மொத்தம் 12 ஜிபி ரேம் என்று நிறுவனம் கூறுகிறது. ஸ்டோரேஜ் 128 ஜிபி. டேப்லெட்டில் ஐடெல்லின் உள்ளமைக்கப்பட்ட AI வாய்ஸ் அசிஸ்டண்ட் உள்ளது மற்றும் (கே–12 கன்டென்ட் ), ஐபல்ஸ் கிட்ஸ் ஸ்பேஸ் மற்றும் ஸ்கிரீன் ப்ரொஜெக்ஷன் போன்ற முன்பே ஏற்றப்பட்ட பயன்பாடுகளுடன் வருகிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த அம்சங்கள் ரீடிங் , வேலை மற்றும் குடும்ப பயன்பாட்டிற்கான ஒரு முழுமையான டேப்லெட்டாக இதை மாற்றுகின்றன.

அறிமுக விழாவில் பேசிய ஐடெல் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அரிஜித் தல்பத்ரா, “நடைமுறை கண்டுபிடிப்புகள் மூலம் டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதே எங்கள் பயணமாக இருந்து வருகிறது என்றார்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo