10100mAh பேட்டரியுடன் Honor Tablet 10 அறிமுகம் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்க
Honor அதன் புதிய டேப்லெட் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது, நிறுவனம் இந்த டேப்லெட்டை உள்நாட்டு சந்தையில், அதாவது சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், சில காலத்திற்கு முன்பு நிறுவனம் மலேசியா போன்ற உலகளாவிய சந்தைகளில் இதை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹானரின் இந்த புதிய டேப்லெட்டில் 10,100mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyHonor Tablet 10 விலை
நிறுவனம் 8GB + 128GB அடிப்படை மாறுபாட்டிற்காக 1274 யுவான் (தோராயமாக ரூ. 15,000) விலையில் ஹானர் டேப்லெட் 10 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது . 12GB + 512GB மாறுபாட்டை 1954 யுவானுக்கு (தோராயமாக ரூ. 23,000) வாங்கலாம். வண்ண வகைகளைப் பற்றி பேசுகையில், இதை சன்ரைஸ் இம்ப்ரெஷன், ஸ்கை ப்ளூ மற்றும் ராக் கிரே ஆகிய வண்ணங்களில் வாங்கலாம். டேப்லெட்டுக்கான முன்கூட்டிய ஆர்டர்கள் தொடங்கியுள்ளன. இதன் விற்பனை இன்று முதல் அதாவது மே 31 ஆம் தேதி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தொடங்கும்.
Honor Tablet 10 சிறப்பம்சம்.
Honor பேட் 10 12.1 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 2.5K ரெசளுசன் 120Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது. இந்த டேப்லெட்டின் பிக்சல் டென்சிட்டி 249 PPI ஆகும். இது 500 நிட்களின் உச்ச பிரகாசத்தைக் கொண்டுள்ளது. இந்த போனில் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 சிப்செட்டுடன் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் 12 ஜிபி டர்போ ரேம் வழங்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 15 உடன் வருகிறது, மேலே MagicOS 9.0 ஸ்கின் உள்ளது. இது கண் வசதிக்காக TÜV ரைன்லேண்ட் சர்டிபிகேசன் கொண்டுள்ளது.
இந்த டேப்லெட்டில் இருபுறமும் 8 மெகாபிக்சல் கேமராக்கள் உள்ளன. இந்த டேப்லெட் 66W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 10,100mAh பேட்டரியுடன் வருகிறது. கனெக்சன் பொறுத்தவரை, இது WiFi 6 மற்றும் Bluetooth 5.3 க்கான சப்போர்டை கொண்டுள்ளது. இந்த நிறுவனம் டேப்லெட்டில் பல AI இயங்கும் கருவிகளை வழங்கியுள்ளது. இவற்றில் டிரான்ஸ்கிரிப்ஷன், நிகழ்நேர வொயிஸ்லிருந்து டெக்ஸ்ட்டுக்கு மாற்றம், பன்மொழி ட்ரேன்செக்சன், ஷோர்ட் நாட் சுருக்கம் மற்றும் கையெழுத்து அங்கீகாரம் போன்றவை அடங்கும். டேப்லெட்டின் டைமென்சன் 277.07 x 179.28 x 6.29 mm மற்றும் அதன் எடை 525 கிராம் ஆகும் .
இதையும் படிங்க:6720mAh பேட்டரியுடன் Moto இரண்டு போன் அறிமுகம், தரமான அம்சம் மற்றும் விலை பாருங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile