அரசின் அதிரடி AC லிமிட் கூலிங் 20°C குறைவாகவும் சூடு 28°C வரை மட்டுமே இருக்க வேண்டும் புதிய விதி காரணம் என்ன

HIGHLIGHTS

புதிய விதியின் படி AC யின் வெப்பநிலை 20°C லிருந்து 28°C வரை மட்டுமே வைக்க வேண்டும்

இதன் மூலம் "ஏசி பயன்பாட்டில் சீரான தன்மையைக் கொண்டுவரவும், மின்சாரம் அதிகர்க்கது

புதிய விதி, 20°C க்கும் குறைவான வெப்பநிலையில் ஏசிகள் மூலம் ஏற்படும் அதிக எலெக்ட்ரிசிட்டி செலவு சுமையை குறைக்கும்

அரசின் அதிரடி AC லிமிட் கூலிங் 20°C குறைவாகவும் சூடு 28°C வரை மட்டுமே இருக்க வேண்டும் புதிய விதி காரணம் என்ன

மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் செவ்வாய்கிழமை அன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வசதிக்காக இந்தியாவில் விரைவில் AC வெப்பநிலையை தரப்படுத்துவது, ஏர் கண்டிஷனர்கள் 20°C க்குக் கீழே குளிர்விப்பதையோ அல்லது 28°C க்கு மேல் வெப்பப்படுத்துவதையோ கட்டுப்படுத்துவது தொடர்பான பரிசோதனை நடத்தப்படும் என்று தெரிவித்தார். டெல்லியில் வெப்ப அலை மற்றும் குடியிருப்பாளர்கள் வெப்பத்தால் தத்தளித்து வருவதால், இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டு வரும் நிலையில் இது நிகழ்ந்துள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

மேலும் இந்த புதிய ஏர் கண்டிஷனர் விதிமுறையை விரைவில் செயல்படுத்தும், அதாவது இந்த புதிய விதியின் படி AC யின் வெப்பநிலை 20°C லிருந்து 28°C வரை மட்டுமே வைக்க வேண்டும், அதாவது இதன் அர்த்தம் 20°C கீழ் கூலாகவோ அல்லது 28°C மேல் சூடாகவோ வைக்க கூடாது இது ஒரு முதல் கட்ட சோதனையாகும்,” என்று கட்டார் கூறினார். குறைந்தபட்சம் AC 20 டிக்ரீ செல்சியஸ் மற்றும் அதிகபட்ச 28 டிகிரி செல்சியஸ் மட்டுமே இருக்க வேண்டும் இதன் மூலம் “ஏசி பயன்பாட்டில் சீரான தன்மையைக் கொண்டுவரவும், மிகக் குறைந்த குளிரூட்டும் அமைப்புகள் காரணமாக அதிகப்படியான மின் பயன்பாட்டைக் குறைக்கவும் உதவும் என்று ஹரியானா முன்னாள் முதல்வர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சிப் சிப் வியர்வை விரட்ட AC யில் இந்த 5 முறையில் ரூமை ஆக்கலாம் செம்ம கூலாக

புதிய AC டெம்ப்ரெட்ஜர் விதி என்ன ?

அதாவது புதிய விதிக்கு பிறகு இந்தியா முழுக்க ஏர் கண்டிஷனர் ஒரு லிமிடெட் ஒப்பரேட்டிங் ரேன்ஜ் மட்டுமே இருக்க வேண்டும் தற்பொழுது ஏசி அதிகபட்சமாக 16°C அல்லது 18°C வைக்கிறார்கள் அது இனி நடக்காது அதாவது குறைந்தபட்ச கூலிங் செட்டிங் 20°C மற்றும் அதிகபட்ச சூடான வெப்பநிலை 28°C ஆக இருக்க வேண்டும் இந்த விதியின் மூலம் 3 ஆண்டுகளில் நுகர்வோர் ரூ.18 ஆயிரத்து 20 ஆயிரம் கோடியை மிச்சப்படுத்துவார்கள் என அரசு நம்புகிறது. இது தவிர, மின்சாரம் மற்றும் கார்பன் வெளியேற்றமும் குறையும்.

இந்த நடவடிக்கை எடுக்க காரணம் என்ன?

அறிக்கையின்படி தேசிய மின் கட்டமைப்பின் மீதான சுமையைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் வலியுறுத்துவதாகவும், பொறுப்பான எரிசக்தி பயன்பாட்டை வலியுறுத்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய விதி, 20°C க்கும் குறைவான வெப்பநிலையில் ஏசிகள் மூலம் ஏற்படும் அதிக எலெக்ட்ரிசிட்டி செலவு சுமையை நோக்கில் அமைந்துள்ளது.

ஏர் கண்டிஷனரின் வெப்பநிலையை ஒரு சில டிகிரி அதிகரிப்பது குறிப்பிடத்தக்க பவர் சேமிப்புக்கு வழிவகுக்கும் என்று எரிசக்தி திறன் பணியகம் (BEE) கூறுகிறது. இந்தியாவில் பெரும்பாலான ஏசிகள் பொதுவாக 20–21°C க்கு இடையில் அமைக்கப்பட்டிருந்தாலும், அனைத்து ஸ்டார் -லேபிளிடப்பட்ட ரூம்கள் மற்றும் கார் ஏசிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆறுதல் லிமிட் 24° ஆகும், அதே நேரத்தில் பிஸ்னஸ் கட்டிடங்களுக்கு இது 24 டிகிரி செல்சியஸ் மற்றும் 25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று 2020 ஆணை கூறுகிறது. வெப்பநிலை அமைப்பை 20°C இலிருந்து 24°C ஆக அதிகரிப்பது மின்சார பயன்பாட்டை 24% வரை குறைக்கும் என்று அது குறிப்பிடுகிறது. உண்மையில், ஒவ்வொரு 1°C அதிகரிப்பும் மின் பயன்பாட்டை தோராயமாக 6% குறைக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo