கூகுள் பிளேஸ்டோரிலிருந்து 85 செயலிகளை அதிரடியாக அதிரடி நீக்கம்.

கூகுள்  பிளேஸ்டோரிலிருந்து 85 செயலிகளை அதிரடியாக அதிரடி நீக்கம்.
HIGHLIGHTS

செயலிகளில் தீங்கு ஏற்படுத்தும் தன்மை கொண்ட ஆட்வேர்கள் மறைந்திருந்ததை டிரென்ட் மைக்ரோ குழு கண்டறிந்தது. இது கூகுள் பிளே ஸ்டோரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து 85 செயலிகளை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. டிரென்ட் மைக்ரோ எனும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்து தெரிவித்த தகவல்களை கொண்டு கூகுள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது.

செயலிகளில் தீங்கு ஏற்படுத்தும் தன்மை கொண்ட ஆட்வேர்கள் மறைந்திருந்ததை டிரென்ட் மைக்ரோ குழு கண்டறிந்தது. இது கூகுள் பிளே ஸ்டோரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வழக்கமான ஆட்வேர்களை போன்று இல்லாமல் இவற்றில் தோன்றும் விளம்பரங்களை க்ளோஸ் செய்வது கடினமாகும்.

ஹார்ட்வேர்களின் தன்மை கூகுள் பிளேவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கண்டறிந்திருக்கிறோம். டிரென்ட் மைக்ரோ புதிய ஆட்வேர்களை AndroidOS_Hidenad.HRXH என கணித்திருக்கிறது. இவை வழக்கமாக தோன்றும் விளம்பரங்களை போன்றில்லாமல் இவற்றில் பின்பற்றப்பட்டும் வழிமுறைகளால் இவற்றை க்ளோஸ் செய்வதே கடினமானதாகும். என டிரென்ட் மைக்ரோ தெரிவித்துள்ளது. 

இந்த செயலிகள் வெவ்வேறு டெவலப்பர் அக்கவுண்ட்களில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றை பல்வேறு டிஜிட்டல் சான்றிதழ்கள் மூலம் கையெழுத்திடப்பட்டு இருக்கின்றன. எனினும், இவை ஒரே மாதிரியான அம்சங்கள் மற்றும் கோட்களை பயன்படுத்தியிருக்கின்றன.

ஹார்ட்வேர் நிறைந்ததாக கண்டறியப்பட்ட செயலிகளில் பெரும்பான்மையானவை புகைப்படம் மற்றும் கேமிங் சார்ந்து உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை சுமார் 80 லட்சத்திற்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்திருந்தனர். இதில் சூப்பர் செல்ஃபி, காஸ் கேமரா, ஒன் ஸ்டிரோக் லைன் பஸுல் உள்ளிட்டவை பிரபல செயலிகளாக அறியப்படுகின்றன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo