Cloudflare செயலிழப்பு:ஒரே நேரத்தில் ChatGPT, Twitter, Canva மற்றும் Spotify போன்ற பல சேவையில் பெரும் கோளறு

Cloudflare செயலிழப்பு:ஒரே நேரத்தில் ChatGPT, Twitter, Canva மற்றும் Spotify போன்ற பல சேவையில் பெரும் கோளறு

நவம்பர் 18, 2025 ஆன இன்று ஒரே நேரத்தில் Cloudflare, இந்தியாவிலும் உலகெங்கிலும் மிக பெரிய சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது அதாவது பல பெரிய இன்டர்நெட் தடை ஏற்பட்டது.இந்த இடையூறு அதிகாலையில் தொடங்கியது, இதனால் X (முன்னர் Twitter), ChatGPT, Perplexity மற்றும் Canva போன்ற தளங்களின் மிக பெரிய இடையுறு ஏற்ப்பட்டுள்ளது அதாவது சுமார் 1 மணி நேரத்திற்க்கு முன்பு canva, twitter போன்றவற்றில் அப்லோட் எந்த போஸ்ட்டும் அப்லோட் மற்றும் டவுன்லோட் செய்ய முடியாமல் இருந்தது போனது இதன் முழு தகவல்கள் பார்க்கலாம் வாங்க

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

உலகின் ஆயிரக்கணக்கான பெரிய வலைத்தளங்களுக்கு சக்தி அளிக்கும் கிளவுட்ஃப்ளேர் திடீரென செயலிழந்தது. தாக்கம் மிகவும் கடுமையாக இருந்ததால், OpenAI, Twitter (X), Spotify, Canva, மற்றும் Downdetector (தடைகளைக் கண்காணிக்கும்) கூட செயலிழந்தன. இந்த இண்டர்நெட்டை ஏன் தாக்கியது என்பதைக் கண்டுபிடிப்போம்.

இவை அனைத்தும் ஒரு பெரிய தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்டவை, இது பல அதிக ஆன்லைன் சேவைகளுக்கான முதன்மை ஐடி உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வழங்குநரான கிளவுட்ஃப்ளேரைப் பாதித்தது. இந்த சம்பவத்தின் நோக்கம் மிகப் பெரியதாக இருந்ததால், டவுன்டெக்டர் செயலிழப்பைக் கண்காணிக்கும் சேவையும் தற்காலிகமாக அதே தொழில்நுட்பக் கொலரின் காரணமாக மிக பெரிய பாதிப்பு ஏற்ப்பட்டது.

இதையும் படிங்க:WhatsApp போல Arattai ஆப் யில் E2E அம்சம் இனி உங்கள் செட்டை பத்திரமாக இருக்கும்

இந்த செயலிழப்பு எப்பொழுது ஏற்ப்பட்டது?

நவம்பர் 18 ஆம் தேதி மதியம் 12:00 மணிக்கு (இந்திய நேரப்படி பிற்பகல் 5:30) இந்த செயலிழப்பு தொடங்கியது. இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள பயனர்கள் தங்களுக்குப் பிடித்த வெப்சைட்டை ” சேவையகப் பிழை” அல்லது “500 பிழை” போன்ற மேசெகளை பார்க்கத் தொடங்கினர். வேலை செய்பவர்களுக்கு Canva செயலிழந்தது, ம்யூசிக் கேட்பவர்களுக்கு Spotify செயலிழந்தது, AI உடன் சேட் அடிப்பவர்களுக்கு ChatGPT போன்றவற்றிலும் பெரும் கோளறு ஏற்ப்பட்டது இது என்னவோ இன்டர்நெட் பிழை என நினைத்தனர் ஆனால் அதன் பிறகு தான் முழு செயலிழப்பு என்பது தெரிய வந்தது.

Cloudflare என்ற என்ன?

பல வெப்சைட்களில்ன் ஆணை வேராக இருப்பது கிளவுட்ஃப்ளேர் ஒரு நிறுவனமாகும்: இது கன்டென்ட் விரைவாக வழங்குதல், தாக்குதல்களிலிருந்து பாதுகாத்தல் மற்றும் அதிக பயன்பாட்டின் போது வெப்சைட்களை தொடர்ந்து இயக்குதல் ஆகியவற்றில் உதவுகிறது. அதன் பங்கைக் கருத்தில் கொண்டு, கிளவுட்ஃப்ளேரில் ஏற்பட்ட தோல்வி பல சேவைகளுக்குப் பரவுகிறது. இந்த நிகழ்வின் காரணமாக, இணையம் ஒரு சில பெரிய வழங்குநர்களைச் சார்ந்திருப்பதை நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர், இது ஏதாவது தவறு நடந்தால் ஆபத்தை ஏற்படுத்தும்.

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile