நியூஸ் மற்றும் மேக்சின் காம்பேரிசனில் இருக்கும் Apple News+

நியூஸ் மற்றும் மேக்சின் காம்பேரிசனில்  இருக்கும் Apple News+
HIGHLIGHTS

பயனர் விவரங்களை பாதுகாக்கும் நோக்கில் விளம்பரதாரர்களால் பயனர் நடவடிக்கைகளை டிராக் செய்ய முடியாது என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

இனி  நீங்கள் Apple News+ magazine subscription service மூலம் நீங்கள் ஆப்பிளின் சாதனத்திலே கண்டுகளிக்கலாம்.

ஆப்பிள் நிறுவனம் புதிய செய்தி சேவையை துவங்கியிருக்கிறது. ஆப்பிள் நியூஸ் பிளஸ் என அழைக்கப்படும் புதிய சேவையில் 300க்கும் அதிகமான பத்திரிகைகளை வாசிக்க முடியும். ஆப்பிள் நியூஸ் பிளஸ் சேவைக்கான கட்டணம் மாதம் 9.99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையில் உலகின் பிரபல பத்திரிகைகளை டிஜிட்டல் முறையில் வாசிக்கும் வசதி வழங்கப்படுகிறது.

நம் வாழ்க்கையில் ஊடகத்தின் சக்தி மற்றும் இது மேற்கொள்ளும் மாற்றத்தின் மீது எங்களுக்கு அதிகளவு நம்பிக்கை இருக்கிறது என ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்தார். அந்த வகையில் ஆப்பிள் நியூஸ் பிளஸ் சேவை வாடிக்கையாளர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஆப்பிள் நியூஸ் பிளஸ் சேவை அமெரிக்கா மற்றும் கனடாவில் ஏற்கனவே கிடைக்கிறது. இரு நாடுகளை தொடர்ந்து பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆப்பிள் நியூஸ் பிளஸ் சேவை வழங்கப்படும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

பயனர் விவரங்களை பாதுகாக்கும் நோக்கில் விளம்பரதாரர்களால் பயனர் நடவடிக்கைகளை டிராக் செய்ய முடியாது என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

இதைக் கொண்டு, சந்தா திட்டத்தை 6 குடும்ப உறுப்பினர்களுடன் பயனர்கள் பகிர்ந்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டின் இறுதியில் ஆப்பிள் இந்த சேவையை இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் தொடங்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo