ஆப்பிளின் அதன் க்ரெடிட் கார்ட் சேவையும் ஆரம்பமாகியது..!

ஆப்பிளின்  அதன் க்ரெடிட்  கார்ட் சேவையும் ஆரம்பமாகியது..!
HIGHLIGHTS

ஆப்பிள் கார்டு கொண்டு நீங்கள் செய்த செலவினங்களை மிகத்துல்லியமாகவும், எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் பட்டியலிடப்படுகிறது. ஆப்பிள் மேப்ஸ் சேவையை பயன்படுத்துவதால்,

ஆப்பிள் நிறுவனத்தின் கிரெடிட் கார்டு சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் கார்டு என அழைக்கப்படும் புதிய கிரெடிட் கார்டினை ஆப்பிள் பே பயன்படும் அனைத்து சேவைகளிலும் பயன்படுத்தலாம்.

ஆப்பிள் கார்டு கொண்டு நீங்கள் செய்த செலவினங்களை மிகத்துல்லியமாகவும், எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் பட்டியலிடப்படுகிறது. ஆப்பிள் மேப்ஸ் சேவையை பயன்படுத்துவதால், பயனர் எங்கு செலவு செய்தனர் என்ற விவரங்களை பின்னர் பார்க்க முடியும்.

பொதுவாக கிரெடிட் கார்டு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படும் கிரெடிட் கார்டு செலவினங்கள் பட்டியலில் பொருட்களை விற்பனை செய்தவர்களின் விவரம் தெளிவற்றதாகவோ, எளிதில் புரிந்து கொள்ள முடியாத வகையில் இருப்பதற்கு இது முற்றிலும் மாற்றாக இருக்கும். 

பயனர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஆப்பிள் கார்டு கொண்டு பயனர் வாங்கும் பொருட்கள் மற்றும் அவற்றை எங்கு வாங்கினர் என்ற விவரங்கள் எதுவும் சேகரிக்கப்படாது. இந்த கார்டு ஆப்பிள் ஐபோனின் வாலெட் பகுதியில் விவரங்களை சேகரித்து வைக்கும்.

இதுதவிர ஆப்பிள் கார்டு கொண்டு மேற்கொள்ளப்படும் அனைத்து பரிமாற்றங்களுக்கு 2 சதவிகித கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆண்டு சந்தா செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டாலோ, கட்டணம் தாமதமாக செலுத்தினாலோ எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் கார்டு டைட்டானியம் மூலம் உருவாக்கப்படுகிறது. எனினும் இதில் வழக்கமான கார்டுகளில் இருப்பதை போன்ற கிரெடிட் கார்டு நம்பர், சி.வி.வி. எண் உள்ளிட்ட எதுவும் இடம்பெற்றிருக்காது. இந்த விவரங்களும் ஐபோனின் வாலெட் பகுதியில் இடம்பெற்றிருக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo