குறைந்த விலையில் இன்டர்நெட் சேவை வழங்கும் அமேசான்..!

HIGHLIGHTS

அமேசான் தளத்தில் ஏற்கனவே ப்ரைம் வீடியோ போன்ற, அம்சத்தை வழங்கி வரும் நிலையில் தற்பொழுது அமேசான் நிறுவனம் ஒரு புதிய ப்ரொஜெக்ட் ஒன்று தயார் செய்து வருகிறது

குறைந்த விலையில்  இன்டர்நெட்  சேவை வழங்கும்   அமேசான்..!

அமேசான் தளத்தில்  ஏற்கனவே ப்ரைம் வீடியோ  போன்ற, அம்சத்தை  வழங்கி வரும் நிலையில் தற்பொழுது அமேசான் நிறுவனம் ஒரு புதிய ப்ரொஜெக்ட்  ஒன்று தயார் செய்து வருகிறது குய்பர்  என்ற பெயரில் இந்த திட்டம் இருக்கிறது இதனுடன் இந்த திட்டத்தின் கீழ்  நாடு முழுவதும்  அதிவேக இன்டர்நெட்  வசதியா வழங்க அமேசான்  திட்டமிட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

அதிவேக இணைய வசதியை வழங்க அமேசான் 3000 செயற்கைக்கோள்களை அமேசான் பயன்படுத்த இருக்கிறது. இவற்றின் உதவியுடன் உலகம் முழுக்க இடையூறின்றி இணைய சேவையை வழங்க முடியும் என அமேசான் நினைக்கிறது. 3000 செயற்கைக்கோள் மூலம் உலக மக்கள் தொகையின் 95 சதவிகிதம் பேருக்கு இணைய வசதியை வழங்க முடியும் என கூறப்படுகிறது.

குய்பர் நீண்ட கால திட்டம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கும் அதிகமாக இன்டர்நெட் வசதியை வழங்க முடியும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை அமேசான் ஆண்ட்ராய்டு போலீஸ் நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறது. புதிய திட்டத்தின் மூலம் உலகம் முழுக்க செயற்கைக்கோள்களை நிறுவ அமேசான் திட்டமிட்டுள்ளது

அனைவருக்கும் இன்டர்நெட் வசதியை வழங்கும் நோக்கம் கொண்ட மற்ற பிராண்டுகளுடன் கைகோர்க்கவும் அமேசான் திட்டமிட்டுள்ளது. அமேசான் நிறுவனம் மொத்தம் 3236 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உலக மக்கள் தொகையில் 95 சதவிகிதம் பேருக்கு இன்டர்நெட் வசதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதேபோன்று ரிலையன்ஸ் ஜியோவும் தனது ஜிகாஃபைபர் திட்டத்தை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இவை நாடு முழுக்க அதிவேக பிராட்பேண்ட் இன்டர்நெட் வசதியை குறைந்த விலையில் வழங்க இருக்கிறது. 

இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும் இத்திட்டத்தை வெற்றியடைய வைக்க அமேசான் நிறுவனம் பெரும் தொகையை முதலீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் அமேசான் நிறுவனம் துவக்கத்தில் இன்டர்நெட் கட்டணத்தை குறைவாக நிர்ணயம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo