OnePlus இந்தியா அதன் மெகா நிகழ்வில் OnePlus Nord Buds 2 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. OnePlus Nord Buds 2 உடன், நிறுவனம் OnePlus Nord CE 3 Lite 5G ஐயும் அறிமுகப்படுத்தியுள்ளது. OnePlus Nord Buds 2 உடன், நிறுவனம் சிறந்த பேஸ் மற்றும் தெளிவான ஆடியோ தரத்தை கோரியுள்ளது. ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 2ல் AI அல்காரிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரூ.2,999 விலையில் பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Survey
✅ Thank you for completing the survey!
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 2 மாடல் லைட்னிங் வைட் மற்றும் தண்டர் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான், ப்ளிப்கார்ட், ஒன்பிளஸ், மிந்த்ரா போன்ற வலைதளங்களில் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுதவிர ஒன்பிளஸ் எக்ஸ்பீரின்ஸ் ஸ்டோர் மற்றும் தேர்வு செய்யப்பட்ட பார்ட்னர் ஸ்டோர்களிலும் நடைபெற இருக்கிறது.
புதிய நார்ட் பட்ஸ் 2 மாடலில் 25db ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, ப்ளூடூத் 5.3, ஒன்பிளஸ் ஃபாஸ்ட் பேர், டால்பி அட்மோஸ், 94ms அல்ட்ரா லோ லேடன்சி மற்றும் 12.4 டைட்டானியம் டைனமிக் டிரைவர்கள் போன்ற அம்சங்கள் உள்ளன.
இந்த இயர்போன்களில் டச் கண்ட்ரோல், IP55 தர வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது. இதன் இயர்பட் ஒவ்வொன்றும் 4.7 கிராம் எடை அளவில் உள்ளன. இதனால் இவற்றை காதுகளில் அணிவது சவுகரிய அனுபவத்தை வழங்கும். இயர்பட்ஸ் உடன் மூன்று வித அளவுகளில் சிலிகான் இயர்பிளக் வழங்கப்படுகின்றன.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile