Noise Shots X5 Pro 150 மணி நேர பேட்டரி பேட்டரி பேக்கப் வசதியுடன் அறிமுகம்.

Noise Shots X5 Pro 150 மணி நேர பேட்டரி  பேட்டரி பேக்கப் வசதியுடன் அறிமுகம்.

அணியக்கூடிய சாதனங்களுக்கு பெயர்பெற்ற நாய்ஸ் பிராண்டு இந்தியாவில் நாய்ஸ் ஷாட்ஸ் எக்ஸ்5 ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தில் ப்ளூடூத் 5, குவால்காம் ஆப்ட் எக்ஸ் மற்றும் ஏஏசி வசதி வழங்கப்பட்டுள்ளன.

நாய்ஸ் ஷாட்ஸ் எக்ஸ்5 ப்ரோ சிறப்பம்சங்கள்

– ப்ளூடூத் 5 மூலம் சாதனங்களுடன் இணைந்து கொள்ளும்
– 6எம்எம் கிராஃபீன் ஸ்பீக்கர் டிரைவர்கள், குவால்காம் ஆப்ட் எக்ஸ் மற்றும் ஏஏசி 
– இயர்பட்சில் ஸ்மார்ட் டச் கண்ட்ரோல்கள்
– வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
– கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி
– 8 மணி நேர பிளேபேக்
– யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட்

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளத்துடன் இணைந்து இயங்கும் புதிய நாய்ஸ் ஷாட்ஸ் எக்ஸ்5 ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஐபிஎக்ஸ்7 சான்றுடன் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியை வழங்குகிறது. யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் கேஸ் உடன் வரும் புதிய இயர்பட்ஸ் ஒருமுறை சார்ஜ் செய்தால் எட்டு மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்குகிறது.

இதனுடன் வரும் சார்ஜிங் கேஸ் 2200 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது. இதை கொண்டு இயர்பட்ஸ்-ஐ 18 முறை சார்ஜ் செய்து கொள்ளலாம். இது 150 மணி நேரத்திற்கு பிளேபேக் டைம் வழங்குகிறது. மேலும் இந்த கேஸ் மற்ற சாதனங்களுக்கும் ரிவர்ஸ் சார்ஜ் செய்யும் வசதி கொண்டிருக்கிறது.

நாய்ஸ் ஷாட்ஸ் எக்ஸ்5 ப்ரோ சார்கோல் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 4999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு முடிந்ததும் இதன் விற்பனை துவங்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo