HIGHLIGHTS
ஏர்டோப்ஸ் 131 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து உள்ளது
ஏர்டோப்ஸ் 131 இயர்பட் ஒவ்வொன்றும் 3.5 கிராம் எடை கொண்டது
இதன் விலை ரூ. 1299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
இந்தியாவின் பிரபல ஆடியோ சாதனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமான போட் ஏர்டோப்ஸ் 131 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. புதிய இயர்பட்ஸ் மாடலில் இன்ஸ்டா வேக் என் பேர், ப்ளூடூத் 5.0, யுஎஸ்பி டைப் சி சார்ஜிங், மல்டி-பன்ஷன் பட்டன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த இயர்பட்களின் சார்ஜிங் கேசை திறந்ததும் இயர்பட்கள் சாதனத்துடன் இணைந்து கொள்ளும் வசதி கொண்டிருக்கின்றன. இதில் வழங்கப்பட்டுள்ள பேட்டரிகள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 3 மணி நேர பேக்கப் வழங்கும் திறன் கொண்டவை ஆகும். இதன் சார்ஜிங் கேசில் 650 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.
Surveyஏர்டோப்ஸ் 131 இயர்பட் ஒவ்வொன்றும் 3.5 கிராம் எடை கொண்டது ஆகும். இவற்றினுள் 13 எம்எம் டிரைவர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என போட் தெரிவித்துள்ளது. இதை கொண்டு ஆடியோ, திரைப்படங்கள் மற்றும் அழைப்புகளில் சிறப்பான அனுபவத்தை பெற முடியும்.
புதிய போட் ஏர்டோப்ஸ் 131 ஆக்டிவ் பிளாக், மிட்நைட் புளூ மற்றும் செர்ரி பிளாஸம் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile