Boat நிறுவனம் 50 மணி நேர பேட்டரி பேக்கப்புடன் boAt Airdopes 100 TWS அறிமுகம்.

Boat நிறுவனம் 50 மணி நேர பேட்டரி பேக்கப்புடன் boAt Airdopes 100 TWS அறிமுகம்.
HIGHLIGHTS

போட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது

பெபில் வடிவம் கொண்ட போட் ஏர்டோப்ஸ் 100 அளவில் சிறியதாகவும், தலைசிறந்த டிசைன் மற்றும் கேஸ் கொண்டிருக்கிறது

ஏர்டோப்ஸ் 100 சபையர் புளூ, ஒபல் பிளாக் மற்றும் எமரால்டு கிரீன் போன்ற நிறங்களில் கிடைக்கிறது

போட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய போட் ஏர்டோப்ஸ் 100 மாடல் அசத்தல் தோற்றம், ENx, BEAST, IWP, மற்றும் ASAP போன்ற அதிநவீ தொழில்நுட்ப வசதிகள், தலைசிறந்த சவுண்ட், நீண்ட நேர பேட்டரி பேக்கப் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

பெபில் வடிவம் கொண்ட போட் ஏர்டோப்ஸ் 100 அளவில் சிறியதாகவும், தலைசிறந்த டிசைன் மற்றும் கேஸ் கொண்டிருக்கிறது. புதிய போட் ஏர்டோப்ஸ் 100 சபையர் புளூ, ஒபல் பிளாக் மற்றும் எமரால்டு கிரீன் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் ப்ளூடூத் 5.2, IWP எனப்படும் (Insta Wake N Pair) அம்சம் கொண்டுள்ளது. இது கேஸ்-ஐ திறந்ததும் பயனர் ஸ்மார்ட்போனுடன் இணைந்து கொள்ளும்.

போட் ஏர்டோப்ஸ் 100 மாடலில் 10mm டைனமிக் டிரைவர்கள் உள்ளன. இவை சிறப்பான ஆடியோ மற்றும் டீப் பேஸ் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள குவாட் மைக்ரோபோன்கள் மற்றும் ENX தொழில்நுட்பம் அழைப்பின் போதும் தெளிவான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. டச் கண்ட்ரோல் வசதி இருப்பதால், பாடல்கள், வால்யும் மாற்றுவது மற்றும் அழைப்புகளை ஏற்க முடியும்.

இதில் உள்ள பீஸ்ட் (BEAST) மோட் ப்ளூடூத் மூலம் அல்ட்ரா லோ-லேடென்சி ரியல் ஆடியோவை 50ms வேகத்தில் வழங்குகிறது. ஏர்டோப்ஸ் 100-இல் உள்ள கல்வேனிக் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 50 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. இதில் உள்ள ASAP சார்ஜ் தொழில்நுட்பம் இயர்பட்ஸ்-ஐ அதிவேகமாக சார்ஜ் செய்து விடும். இதன் மூலம் இயர்பட்ஸ்-ஐ ஐந்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம்.

இந்த இயர்பட்ஸ்-இல் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி வசதி உள்ளது. வானிலை, செய்திகள் மற்றும் கிரிகெட் ஸ்கோர் உள்ளிட்டவைகளை ஒன் டச் வாய்ஸ் அசிஸ்டண்ட் மூலம் அறிந்து கொள்ளலாம். போட் ஏர்டோப்ஸ் 100 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை ரூ. 1299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை போட் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo