WhatsApp யின் டெஸ்க்டாப் வெர்சனிலும் வருகிறது க்ரூப் கால் அம்சம்.

WhatsApp யின் டெஸ்க்டாப் வெர்சனிலும் வருகிறது க்ரூப் கால் அம்சம்.
HIGHLIGHTS

வாட்ஸ்அப் அதன் பயனர்களின் வசதிக்காக புதிய அப்டேட்களையும் அம்சங்களையும் தொடர்ந்து கொண்டு வருகிறது

புதிய அப்டேட்டில், பயனர்கள் சிறந்த க்ரூப் கால் வசதியைப் பெறுவார்கள். மேலும், டெஸ்க்டாப் பதிப்பு ஏற்கனவே வேகமாக செய்யப்பட்டுள்ளது

மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜ் செயலியான வாட்ஸ்அப் அதன் பயனர்களின் வசதிக்காக புதிய அப்டேட்களையும் அம்சங்களையும் தொடர்ந்து கொண்டு வருகிறது. இந்நிலையில், இப்போது டெஸ்க்டாப் பயனர்களுக்காக வாட்ஸ்அப் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட்டில், பயனர்கள் பல புதிய அம்சங்களைப் பெறப் போகிறார்கள். புதிய அப்டேட்டில், பயனர்கள் சிறந்த க்ரூப் கால் வசதியைப் பெறுவார்கள். மேலும், டெஸ்க்டாப் பதிப்பு ஏற்கனவே வேகமாக செய்யப்பட்டுள்ளது. க்ரூப் கால் நிர்வாகியின் அதிகாரத்தை அதிகரிக்க நிறுவனம் சமீபத்தில் புதிய பாதுகாப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் புது அப்டேட்  கொண்டு வந்துள்ளது. 

புதிய அப்டேட் மூலம் க்ரூப் கால்களில் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை நிறுவனம் மேம்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், பயனர்கள் குழு அழைப்பில் மேலும் மேலும் பலரை அழைக்கலாம். விண்டோஸிற்கான புதிய வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பயன்பாடானது, இப்போது பயனர்கள் எட்டு பேர் வரை குழு வீடியோ அழைப்புகளையும், 32 பேர் வரை ஆடியோ அழைப்புகளையும் அனுபவிக்க உதவுகிறது என்று மெட்டாவின் வலைப்பதிவு இடுகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் காலங்களில் இந்த வரம்பை மேலும் அதிகரிக்கலாம், இதனால் பயனர்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களுடன் தொடர்பில் இருக்க முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. விண்டோஸிற்கான புதிய வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலி, மொபைல் பதிப்பின் அதே இடைமுகத்தைக் கொண்டுள்ளது என்று மெட்டா கூறுகிறது. அப்டேட் புதிய பல சாதன திறன்களை அறிமுகப்படுத்துகிறது, வேகமாக சாதனத்தை இணைக்கிறது மற்றும் ஒத்திசைக்கிறது, நிறுவனம் தெரிவித்துள்ளது.

கரூப் அட்மினுக்கு  கிடைக்கும் அதிக பவர். 

வாட்ஸ்அப் ஒரே நேரத்தில் இரண்டு புதிய அம்சங்களை வெளியிட உள்ளது. இந்த அம்சங்களின் உதவியால், குரூப் அட்மின் அதிகாரம் அதிகரிக்கப் போகிறது. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் கூறுகையில், இந்த மாற்றங்கள் கடந்த சில மாதங்களில் செய்யப்பட்ட சில புதுப்பிப்புகளைப் பின்பற்றுகின்றன, இதில் குழுக்களைப் பெரிதாக்குவது மற்றும் நிர்வாகிகள் குழுவை நிர்வகிக்கும்போது செய்திகளை நீக்கும் திறனை வழங்குவது உட்பட. அதாவது, குரூப் அட்மின் குரூப்பில் உள்ள எந்த செய்தியையும் நீக்க முடியும். அதே நேரத்தில், வாட்ஸ்அப்பின் புதிய அம்சத்தில், யார் குழுவில் சேரலாம், யார் சேரக்கூடாது என்பதையும் அட்மின் தீர்மானிக்க முடியும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo