6500mAh பேட்டரியுடன் OPPO யின் புதிய போன் அறிமுகம் விலை அம்சங்கள் பாருங்க

HIGHLIGHTS

OPPO அதன் புதிய OPPO A6s 5G,ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.

இதில் 6500mAh பேட்டரி உடன் 45W பாஸ்ட் சார்ஜிங்

இந்த போனில் 50MP கேமரா மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவை இடம்பெற்றுள்ளன

6500mAh பேட்டரியுடன் OPPO யின் புதிய போன் அறிமுகம் விலை அம்சங்கள் பாருங்க

OPPO அதன் புதிய OPPO A6s 5G,ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம். இதில் 6500mAh பேட்டரி, மீடியாடெக் டைமென்சிட்டி 6300 பிராசஸர், 50MP கேமரா மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவை இடம்பெற்றுள்ளன மேலும் இந்த போனின் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

OPPO A6s 5G விலை தகவல்.

OPPO A6s 5G, அரோரா கோல்டு மற்றும் பிளம் பர்ப்பிள் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். இது பல்வேறு மெமரி வகைகளிலும் கிடைக்கும்:

4ஜிபி + 128ஜிபி = ரூ 18,999
6ஜிபி + 128ஜிபி = ரூ 20,999

இந்த போன் Flipkart, Amazon, OPPO Store மற்றும் பிரதான ரீடைலர் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட பல தளங்களில் கிடைக்கும். பல்வேறு வங்கி அட்டைகளுடன் ரூ. 1,000 கேஷ்பேக் சலுகையும் உள்ளது

OPPO A6s 5G சிறப்பம்சம்.

அம்சங்கள் பொறுத்தவரை ஒப்போ A6s 5G ஆனது 6.75-inch HD+ (1570 × 720 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த பேனல் LCD வகையைச் சேர்ந்தது மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 256 PPI பிக்சல் டென்சிட்டி , மற்றும் 1125 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் ஆகியவற்றை ஆதரிக்கிறது. கேமராவைப் பொறுத்தவரை, இதில் 50-மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2-மெகாபிக்சல் இரண்டாம் நிலை லென்ஸ் உள்ளது. செல்ஃபிகளுக்காக, இதில் நேச்சுரல் பியூட்டி மோடு சப்போர்டுடன் கூடிய 5-மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது.

இதையும் படிங்க: புது போன் அறிமுக செய்த குஷியில் Oppoயின் இந்த மாடலுக்கு ரூ,11,500 வரை டிஸ்கவுண்ட்

ஓப்போ A6s 5G, 6500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த போன் 22.4 மணிநேரம் வரை வீடியோ பார்க்கும் வசதியையும், நீண்ட ஸ்டாண்ட்பை நேரத்தையும் வழங்கும் என அந்நிறுவனம் கூறுகிறது. மேலும், இது 45W சூப்பர்வூக் (SUPERVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. மீடியாடெக் டைமென்சிட்டி 6300 பிராசஸர், LPDDR4X ரேம் மற்றும் UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் இது இணைக்கப்பட்டுள்ளது.

கேமிங் மற்றும் நெட்வொர்க் பர்போமன்சை மேம்படுத்துவதற்காக டிசைன் AI கேம்பூஸ்ட் மற்றும் AI லிங்க்பூஸ்ட் 3.0 போன்ற அம்சங்களுடன் இந்த போன் வருகிறது. மேலும், இந்த போன் லூமினஸ் ரெண்டரிங் என்ஜின் மற்றும் டிரினிட்டி என்ஜின் போன்ற அம்சங்களைக் கொண்ட கலர்ஓஎஸ் 15 உடன் வருகிறது.

டிசைனை பொறுத்தவரை, ஓப்போ A6s 8.61 mm திக்னஸ் மற்றும் சுமார் 212 கிராம் எடை கொண்டது. இது ஒரு மெட்டல் பிரேம் கொண்டுள்ளது. கனெக்ஷன் விருப்பங்களில் வைஃபை 5, புளூடூத் 5.4, LDAC சப்போர்ட், ஒரு USB டைப்-சி போர்ட் மற்றும் இயர்போன் ஜாக் ஆகியவை அடங்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo