WhatsApp அந்த ஒரு பக்கவான அம்சம் IOS-யிலும் வந்தாச்சு இனி ஒரு முறை படித்த பின் மீண்டும் படிக்க முடியாது எப்படி அனுப்புவது?
இப்பொழுது நிறுவனம் iPhone பயணர்களுக்கு View Once Text Messages அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் டெக்ஸ்ட் மெசேஜை அனுப்பலாம்
ஒரு முறை படித்தபின் மீண்டும் படிக்க முடியாது எப்படி வேலை செய்யும்
WhatsApp யில் நாம் சில முறை முக்கியமான தகவலை அனுப்பும்போது அவர்கள் ஒரு முறை மட்டும் படித்த பின் அந்த சேட் மறைந்து போக வேண்டும் என நினைக்கிறோம். இப்பொழுது WhatsApp இந்த பிரச்சனையை சரி செய்ய கஸ்டமர்களுக்கு ஒரு புதிய தீர்வை கொண்டு வந்துள்ளது. ஆனால் இப்பொழுது நிறுவனம் iPhone பயணர்களுக்கு View Once Text Messages அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் டெக்ஸ்ட் மெசேஜை அனுப்பலாம் இதன் மூலம் ஒரு ஒரு பிக்ஜரை எப்படி ஒரு முறை பார்த்தவுடன் மறைந்து போகோ அதே போல இந்த View Once Text Messages அம்சமும் ஒருமுறை படித்தபின் Opened என வரும் அதன் பிறகு இந்த மெசேஜை மீண்டும் படிக்க முடியாது. இதன் மூலம் மறு தரப்பினர் அந்த மெசேஜை படித்து விட்டனர் என்பதாகும்.
இதில் சுவாரசியம் என்னவென்றால், இந்த மெசேஜை பட்டிக்கும்போது காப்பி அல்லது ஸ்க்ரீன் ஷாட் போன்றவை செய்ய முடியாது இதன் மூலம் இந்த மெசேஜை யாருக்கும் பார்வர்ட் கூட செய்ய முடியாது ஆனால் இப்பொழுது இந்த அம்சம் ஐபோன் பயனர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது அவை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
WhatsApp View Once Text Messages அம்சம் IOS பயனருக்கும் வந்தாச்சு.
WABetaInfo அறிக்கையின் படி இந்த அம்சம் தற்பொழுது iOS 26.45.10.73 பீட்டா டெஸ்டிங்க்கு ரோல் அவுட் செய்துள்ளது. மேலும் வரும் நாட்களில் அனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சம் கிடைக்கும் இது எப்படி வேலை செய்யும் என பார்க்கலாம் வாங்க.
இந்த அம்சத்தின் கீழ் டெக்ஸ்ட்டை காப்பி மற்றும் ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியாது.
இந்தப் புதிய அம்சத்தில், வாட்ஸ்அப் ப்ரவசியில் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது. சாதாரணமாக, நாம் ஒரு மெசேஜை அனுப்பும்போது, மறுமுனையில் உள்ளவர் அதன் ஸ்கிரீன்ஷாட்டை எடுக்கவோ அல்லது அந்த டெக்ஸ்ட்டை காப்பி அல்லது வேறு இடத்தில் சேமித்துக் கொள்ளவோ முடியும். இருப்பினும், 'ஒருமுறை மட்டும் பார்க்கும் மெசேஜ்கள்' (View Once Text Messages) மூலம் இது சாத்தியமில்லை. இந்த முறையில் அனுப்பப்படும் மெசேஜ்களுக்கு வாட்ஸ்அப் பல கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியாது: பெறுனர் இந்த மெசேஜை படித்தவுடன் ஸ்க்ரீன்ஷாட் எடுக்க விரும்பினால் அது முடியாது.
ஸ்க்ரீன் ரெக்கார்டிங் ப்ளாக்: இந்த அம்சத்தின் மூலம் ஸ்க்ரீனை ரெக்கார்டிங் செய்ய நினைத்தாலும் கூட அதை செய்ய முடியாது.
காப்பி மற்றும் பொர்வர்ட்: நீங்கள் படித்த அந்த மெசேஜை காப்பி அல்லது மற்றொருவருக்கு அனுப்ப நினைத்தால் அது முடியாமல் போகிவிடும்.
ஒரு படித்த பின் மறைந்து போகும்: இந்த அம்சத்தின் மூலம் நீங்கள் இந்த மெசேஜை ஒரு முறை படித்தபின் மறைந்து போகும், அதாவது அதை மீதும் படிக்க விரும்பினால், அது படிக்க முடியாது.
iPhone யில் view-once text message அம்சம் எப்படி அனுப்புவது?
- முதலில் உங்கள் iphone யில் WhatsApp திறக்கவும்.
- இப்பொழுது நீங்கள் மெசேஜ் அனுப்ப நினைக்கும் அந்த நபரின் சேட் திறக்கவும்.
- இப்பொழுது நீங்கள் அனுப்ப நினைக்கும் டெக்ஸ்ட் மெசேஜை டைப் செய்து Send பட்டனை நீண்ட நேரம் அழுத்தி பிடிக்கவும்.
- அதன் பிறகு இப்பொழுது உங்களுக்கு ஸ்க்ரீனில் ஒரு மெனு தோன்றும் அதில் உங்களுக்கு Send as view once ஆப்ஷன் தெரியும்.
- இப்பொழுது அந்த Send as view once ஆப்ஷனை தேர்ந்து எடுத்து அந்த மோடில் அனுப்பவும், இதன் மூலம் உங்கள் மெசேஜ் View Once மோடில் அனுப்ப பட்டது என கமிக்கப்படும்.
- இப்பொழுது பெறுனர் இந்த மெசேஜை படித்த முடித்தபின் மறுமுறை படிக்க முடியாது, அதாவது இதன் மூலம் சேட் மூடினாலோ அல்லது ஸ்க்ரீன் லோக் ஆகினாலோ மீண்டும் மெசேஜ் படிக்க முடியாது.
முன்பு இந்த அம்சம் Android பயனர்களுக்கு கிடைத்தது.
WABetaInfo அறிக்கையின்படி WhatsApp யின் Android பீட்டா வெர்ஷன் 2.26.45.6 யில் View Once Text Messages அம்சம் ரோல் அவுட் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சமானது ஏற்கனவே வீடியோ,போட்டோ,மற்றும் வொயிஸ் போன்றவை ஒரு முறை பார்த்த பிறகு மீண்டும் பார்க்க முடியாது, அதே போல் இப்பொழுது டெக்ஸ்ட் மேசெஜூக்கும் இந்த அம்சம் கொண்டு வந்தது, அதனை தூடர்ந்து இந்த அம்சம் இப்பொழுது IOS பயனர்களுக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.