Digit.in

Jio-வின் இந்த ஒரு திட்டத்தில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,டேட்டா மற்றும் Amazon Prime Lite பல கிடைக்கும்

Highlights

Reliance Jio ரூ,1,029 ப்ரீபெய்ட் திட்டம் கொண்டுவந்துள்ளது

அதிவேக டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் மற்றும் SMS ஆகியவற்றை பெறலாம்

இந்த திட்டத்தில் Amazon prime சப்ஸ்க்ரிப்ஷன் நன்மையுடன் Canva Pro Lite, JioAICloud போன்ற பல கிடைக்கும்

Jio-வின் இந்த ஒரு திட்டத்தில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,டேட்டா மற்றும் Amazon Prime Lite பல கிடைக்கும்

இன்றைய காலத்தில் கஸ்டமர்கள் வெறும் காலிங் மற்றும் டேட்டா நன்மைக்கு பயன்படுவது மட்டுமல்லாமல் என்டர்டைமென்ட் அனுபவமும் பெற விரும்புகிறார்கள், ரிலையன்ஸ் ஜியோவின் (Reliance Jio) ரூ,1,029 ப்ரீபெய்ட் திட்டம், தினசரி அதிவேக டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் மற்றும் SMS ஆகியவற்றை பல கூடுதல் பலன்களுடன் இணைக்கிறது. அந்த வகையில் இந்த திட்டத்தில் Amazon prime சப்ஸ்க்ரிப்ஷன் நன்மையுடன் Canva Pro Lite, JioAICloud போன்ற பல நன்மைகள் வழங்கப்படுகிறது அவற்றின் முக்கிய விவரங்கள் பார்க்கலாம் வாங்க.

Jio ரூ,1,029 திட்டத்தின் நன்மை.

ஜியோவின் இந்த திட்டம் ரூ,1,029 விலையில் வருகிறது இந்த திட்டத்தின் நன்மை என பார்த்தால் இதில் இந்த ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் 84 நாட்களுக்குச் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதில் கஸ்டமர்களுக்கு தினமும் 2ஜிபி அதிவேக இன்டர்நெட் டேட்டா வழங்கப்படும், இதன் மூலம் வேலிடிட்டி காலம் முழுவதும் மொத்தமாக 168ஜிபி டேட்டாவைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகைகளும் அடங்கும், இது தகுதியுள்ள கஸ்டமர்களுக்கு கூடுதல் இன்டர்நெட் அக்சஸ் வழங்குகிறது.

அன்லிமிடெட் கால் மற்றும் SMS நன்மை.

இந்த ரீசார்ஜ் மூலம் ஜியோ கஸ்டமர்களுக்கு அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வொயிஸ் கால்களைப் வழங்குகிறது. அதாவது, கஸ்டமர்கள் லோக்கல் அல்லது STD கால்களுக்குத் தனியாக காலிங் பேலன்ஸ் வைத்திருக்கத் தேவையில்லை. இந்தத் திட்டம் தினமும் 100 SMS வசதியும் வழங்குகிறது. இவற்றை OTP-கள், பேங்க் அலர்ட்கள், முக்கிய நோட்டிபிகேஷன் மற்றும் வழக்கமான மெசேஜ்லுக்குப் பயன்படுத்தலாம்.

Amazon Prime சப்ஸ்க்ரிப்ஷன் நன்மை வழங்கும்.

இந்தத் திட்டத்தில் 84 நாள் அமேசான் பிரைம் சப்ஸ்க்ரிப்ஷன் அடங்கும், இது அமேசான் பிரைம் லைட் மூலம் கிடைக்கும் வீடியோ கண்டேன்ட்களைகளை அணுகுவதற்கான வசதியை வழங்குகிறது. சப்ச்க்ரைபர்கள் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் வழங்குகிறது , இதன் மூலம் அவர்கள் தங்கள் டிவைஸில் திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள் மற்றும் பிற என்டர்டைன்மநெட் கன்டென்ட்களைப் பார்க்க முடியும்.

இந்தச் சப்ஸ்க்ரிப்ஷன், கஸ்டமர்கள் கன்டென்ட் பலன்களுக்காகத் தனித் திட்டங்களை வாங்கத் தேவையின்றி, கூடுதல் என்டர்டைநேமென்ட் விருப்பங்களை வழங்குகின்றன.

Canva Pro Lite, JioAICloud மற்றும் மற்ற நன்மைகள்

டேட்டா மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகளைத் தவிர, ஜியோ ₹1,590 மதிப்புள்ள 12 மாத கேன்வா ப்ரோ லைட் சந்தாவையும் வழங்குகிறது. இந்த ரீசார்ஜில், பயனர்கள் தங்களின் முக்கிய பைல்கள் மற்றும் டிஜிட்டல் கன்டென்ட்களை ஆன்லைனில் சேமிக்க உதவும் JioAICloud-யில் 50GB இலவச ஸ்டோரேஜ் அடங்கும். மேலும், சப்ஸ்க்ரைபர்கள் கிடைக்கக்கூடிய டிவி நிகழ்ச்சிகளைக் காண்பதற்காக JioTV-ஐயும் அக்சஸ் கிடைக்கும்..

Sakunthala

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile

Recommended Articles