ஆண்ட்ராய்டு தளத்தில் புதிய SPARK ஆப் அறிமுகம்.

ஆண்ட்ராய்டு  தளத்தில் புதிய  SPARK ஆப்  அறிமுகம்.
HIGHLIGHTS

இந்த செயலியில் ஜெஸ்ட்யூர் சார்ந்த யு.ஐ., ஸ்மார்ட் இன்பாக்ஸ் வசதி மற்றும் சைடுபாரை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதி போன்றவை வழங்கப்படுகிறது

இந்த செயலியில் ஜெஸ்ட்யூர் சார்ந்த யு.ஐ., ஸ்மார்ட் இன்பாக்ஸ் வசதி மற்றும் சைடுபாரை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதி போன்றவை வழங்கப்படுகிறது

கூகுள் நிறுவனம் 2015 ஆம் ஆண்டு இன்பாக்ஸ் பை ஜிமெயில் எனும் ஈமெயில் செயலியை அறிமுகம் செய்து சமீபத்தி்ல் இது நீக்கப்பட்டது. இந்த செயலியின் முக்கிய அம்சங்களாக மெசேஜ் குரூப்பிங் மற்றும் ரிமைண்டர்கள் இருந்தன.

இன்பாக்ஸ் பை ஜிமெயில் நீக்கப்பட்டு விட்டதால்,IOS . தளத்தில் பிரபலமாக இருக்கும் ஸ்பார்க் செயலி ஆண்ட்ராய்டு தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு கஸ்டமைசேஷன் வசதிகளுடன் ஐ.ஓ.எஸ். தளத்தில் பிரபல மின்னஞ்சல் செயலியாக ஸ்பார்க் இருக்கிறது.

இந்த செயலியில் ஜெஸ்ட்யூர் சார்ந்த யு.ஐ., ஸ்மார்ட் இன்பாக்ஸ் வசதி மற்றும் சைடுபாரை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதி போன்றவை வழங்கப்படுகிறது. ஸ்மார்ட் இன்பாக்ஸ் அம்சத்தை பொருத்தவரை இது அனைத்து மின்னஞ்சல்களையும் தனித்தனியாக பிரித்து ஒழுங்காக காட்சிப்படுத்தும்.

ஜிமெயில் மற்றும் இன்பாக்ஸ் பை ஜிமெயில் செயலிகளை போன்று ஸ்பார்க் செயலியிலும் ஜெஸ்ட்யூர் வசதி வழங்கப்பட்டுள்ளதால், வலது அல்லது இடதுபுறம் ஸ்வைப் செய்து ஈமெயில்களில் பல்வேறு ஆப்ஷன்களை செயல்படுத்திக் கொள்ளலாம். ஆண்ட்ராய்டு தளத்தில் ஸ்பார்க் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது.

அந்த வகையில் வாசிக்கப்படாத மின்னஞ்சல்கள் மேலேயும், மிகமுக்கிய மின்னஞ்சல்கள் மற்றும் இறுதியில் வாசிக்கப்பட்ட மின்னஞ்சல்கள் சீராக வரிசைப்படுத்தப்படும். ஜிமெயில் போன்றே ஸ்பார்க் செயலியிலும் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo