ஃபேஸ்புக் நிறுவனத்தின் F8 2019 நிகழ்வில் புதிய அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் F8 2019  நிகழ்வில் புதிய  அம்சங்கள்  வெளியிடப்பட்டுள்ளது.
HIGHLIGHTS

F8 2019 நிகழ்வில் அறிவிக்கப்பட்ட மாற்றங்கள் தொடர்பான விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் F8 2019 நிகழ்வின் முதல் நாளில் அந்நிறுவனம் புதிய அம்சங்கள் மற்றும் அந்நிறுவன சோசியல் மீடியா சேவைகளில் மேற்கொள்ளப்பட இருக்கும் புதிய மாற்றங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக், மெசஞ்சர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் அந்நிறுவனம் மேற்கொள்ள இருக்கும் புதிய மாற்றங்கள் பற்றிய அறிவிப்பும் சோசியல் வெப்சைட்களில்  தனியுரிமை சார்ந்து பல்வேறு வசதிகளை வழங்குவது பற்றியும் F8 2019 துவக்க நிகழ்வில் விவரிக்கப்பட்டது. F8 2019 நிகழ்வில் அறிவிக்கப்பட்ட மாற்றங்கள் தொடர்பான விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

மெசஞ்சர்:

மெசஞ்சர் செயலியின் அடித்தளத்தை மாற்றியமைத்திருப்பதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. இது முந்தைய பதிப்பை விட மெமரி குறைவானதாகும். புதிய அப்டேட் மூலம் மெசஞ்சரில் வீடியோக்களை பார்த்து ரசிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்டோரிஸ் மற்றும் மெசேஞ்களை பயன்படுத்த தனி இடம் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர மெசஞ்சர் டெஸ்க்டாப் சேவையும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மெசஞ்சர் செயலி உலகம் முழுக்க விரைவில் வழங்கப்பட இருக்கிறது. 

ஃபேஸ்புக்:

ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக எஃப்.பி.5 (FB5) அறிவித்திருக்கிறது. இது ஃபேஸ்புக்கில் புதிய வடிவமைப்பை வழங்குகிறது. இது முந்தைய பதிப்புகளை விட எளிமையாகவும், அதிவேகமாகவும் இருக்கும். ஃபேஸ்புக் செயலி மற்றும் டெஸ்க்டாப் பதிப்புகளில் புதிய மாற்றங்களுக்கான அப்டேட் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. புதிய வடிவமைப்பு மட்டுமின்றி பல்வேறு புதிய வசிதகளை சேர்க்க இருக்கிறது. 

வாட்ஸ்அப்:

வாட்ஸ்அப் செயலியில் பிஸ்னஸ் கேட்டலாக் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் செயலியினுள் பிஸ்னஸ் கேட்டலாக் பார்க்க முடியும். இத்துடன் ஃபேஸ்புக்கின் போர்டல் சேவையில் வாட்ஸ்அப் சேர்க்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் என்க்ரிப்ட் செய்யப்பட்ட அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

ஆகுலஸ் குவெஸ்ட் மற்றும் ஆகுலஸ் ரிஃப்ட் எஸ்:

ஆகுலஸ் குவெஸ்ட் VR ஹெட்செட் மற்றும் ஆகுலஸ் ரிஃப்ஸ் SVR.ஹெட்செட் சாதனங்கள் மே 21 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இத்துடன் வியாபாரங்களுக்கான புதிய ஆகுலஸ் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo