PAN வேண்டுமா அப்போ இந்த டாக்யுமென்ட் மிக மிக அவசியம் இல்லை என்றால் எந்த வேலையும் நடக்காது

PAN வேண்டுமா அப்போ இந்த டாக்யுமென்ட் மிக மிக அவசியம் இல்லை என்றால் எந்த வேலையும் நடக்காது

நீங்கள் PAN கார்ட் செய்ய விரும்பினால் தற்பொழுது அதற்க்கு மிக முக்கியமான டாக்யூமெண்டாக ஆதார்கார்ட் அவசியமாக்கப்பட்டுள்ளது, அதாவது இதன் அர்த்தம் நீங்கள் பேன் கார்ட் உருவாக்க முடிவெடுத்தால் ஆதார் கார்ட் நிச்சயம் தேவைப்படும், இந்த விதி முறை தற்பொழுது ஜூலை 1 முதல் கட்டயமாக்கப்பட்டுள்ளது , இது மட்டுமில்லாமல் உங்கள் ஆதார் நம்பரில் மொபைல் நம்பர் நிச்சயம் லிங்க் ஆகி இருக்க வேண்டும் ஏன் என்றால் PAN கார்ட் செய்யும்போது ஆதார் மூலம் வெரிபை செய்யப்படும் சரி இதன் முழு விவகராம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

புதிய மாற்றம் என்ன?

இது வரை பேன் கார்ட் அப்ளை செய்ய ஆதார் கார்ட் க்கட்டயம் இல்லை அதாவது ஆதார் கார்ட் இல்லை என்றாலும் PAN card உருவாக்க முடியும். ஆனால் இப்பொழுது ஜூலை 1 முதல் வந்த புதிய விதியின் படி பேன் கார்ட் செய்ய ஆதார் கார்ட் கட்டயம்க்கப்பட்டுள்ளது ஆதார் இல்லையென்றால் பேன் கார்ட் உருவாக்கமுடியாது இதை தவிர எந்த வித அரசு சார்ந்த வேலைகளும் செய்ய முடியாது.

31 டிசம்பர் வரை PAN உடன் Aadhaar லிங்க் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

அரசாங்கம் பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது என்பதை உங்களுக்குச் சொல்லலாம். அதாவது உங்களிடம் ஏற்கனவே பான் கார்டு இருந்தும் ஆதார் அட்டை இல்லையென்றால், நீங்கள் நிம்மதியாக இருக்க முடியாது. உண்மையில், டிசம்பர் 31, 2025 க்குள் பான் மற்றும் ஆதாரை இணைக்காதவரின் பான் கார்டு ரத்து செய்யப்படும். வரி ஏய்ப்பைத் தடுக்கவும் நிதி பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது.

இதையும் படிங்க :WhatsApp யில் இந்த சிம்பிள் செட்டிங் ஆன் செய்வதன் மூலம் ஹேக்கிங் பயம் இருக்காது

Pan மற்றும் Aadhaar லிங்க் எப்படி செய்வது?

  • உங்களிடம் Pan மற்றும் Aadhaar கார்ட் இருக்கிறது அது இன்னும் லிங்க் ஆகவில்லை என்றால் அதை எப்படி லிங்க் செய்வது என பார்க்கலாம் வாங்க.
  • முதலில் Tax-e-fillingவெப்சைட்டில் செல்ல வேண்டும்
  • இங்கு உங்களுக்கு Link Aadhaar யின் ஆப்ஷன் கிடைக்கும், அதில் க்ளிக் செய்ய வேண்டும்.
  • இப்பொழுது உங்களுடன் பேன் மற்றும் ஆதார்யின் இரண்டு நம்பரும் அங்கு போட வேண்டும்.
  • இப்பொழுது உங்களின் ஆதாரில் எந்த நம்பர் ரெஜிஸ்ட்டர் செய்திர்களோ அதே நம்பரை இங்கு போடா வேண்டும்.
  • அதன் பிறகு I agree to validate my Aadhaar details with UIDAI என்பதை தட்டி நகர வேண்டும்.
  • கடைசியாக உங்களின் Pan Has Been Linked Successfully என்ற மெசேஜ் வரும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo